புதுச்சேரி :

 

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உலகமே முடங்கியிருக்கும் வேளையில்.

இந்தியா முழுவதும் நேற்று (25 மார்ச்) முதல் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்களுக்கும், அந்த பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கும், அதை அவசியம் கருதி வாங்கும் மக்களுக்கும் அனுமதி அளித்துள்ளது மத்திய அரசு.

மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களின் போக்குவரத்தை தகுந்த போக்குவரத்து சான்றளித்து (Essential Movement Pass) உறுதி செய்ய மாவட்ட நிர்வாகங்களை அறிவுறுத்தியுள்ளது மத்திய அரசு.

மேலும், இதை மீறுவோர் மீது இந்திய தண்டனை சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது. இருந்தபோதும் உரிய சான்றுகள் அளிக்க போதிய அவகாசமும் அறிவுறுத்தலும் இல்லாமல், நாடு முழுக்க நேற்று பல்வேறு இடங்களில் மக்கள் தகுந்த காரணமின்றி நடமாடியதையும், அத்தியாவசிய தேவைக்கு சென்ற வியாபாரிகள், அவசர பணியாளர்கள் உள்ளிட்டவர்கள் உரிய விசாரணையின்றி போலீசாரால் தடியடி வாங்கியதையும் காணமுடிந்தது.

இந்நிலையில், புதுவை முதல்வர் நாராயணசாமி நேற்றிரவு புதுவையின் சில இடங்களில் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படுகிறதா என்பதை நேரில் ஆய்வு செய்தார்.

அப்போது, அத்தியாவசிய தேவைகளுக்காக திறந்திருந்த கடைகளுக்கும், வாங்க வந்த பொது மக்களையும் முக கவசம் அணிய வலியுறுத்தினார், மேலும், தகுந்த காரணமின்றி வருவோரிடம் உரிய விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அங்கிருந்த போலீசாருக்கு அறிவுறுத்தினார்.

இது குறித்த வீடியோ பதிவு ………