சென்னை

ன்று சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தமிழக அரசிடம் முன்னாள் சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் ஒப்படைத்துள்ளார்

சென்னை உயர்நீதிமன்றம் காவல்துறை அதிகாரி பொன் மாணிக்கவேலைச் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமித்திருந்தது.  அவர் 2019-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை அந்தப் பதவியில் நீடிப்பார் என்று உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.  அவரது பணிக்காலம் நவம்பர் 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. தமிழக அரசு, சிலை கடத்தல் வழக்குத் தொடர்பான கோப்புகள், ஆவணங்கள் ஆகியவற்றை உடனடியாக ஒப்படைக்கும்படி பொன் மாணிக்கவேலுக்கு உத்தரவிட்டது.

சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல்,  ‘எனது பதவி தொடர்பான வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஆகவே உச்சநீதிமன்றம் அது தொடர்பாக உத்தரவிடும் வரை காத்திருக்க வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவின்றி ஆவணங்களை ஒப்படைக்க முடியாது.

தமிழக அரசு ஆவணங்களை ஒப்படைக்கும்படி உத்தரவிட்டது பொருந்தாது. ஆகையால் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்புக் குழுவின் கீழ் இருக்கும் வழக்கின் ஆவணங்களை, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஜிபியிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது நீதிமன்ற உத்தரவுக்கு உட்பட்டது அல்ல’ என்று அரசுக்குக் கடிதம் அனுப்பி இருந்தார்.

ஆயினும் தமிழக அரசு சிலைக்  கடத்தல் தடுப்பு அதிகாரியாக அன்பு வை நியமித்தது.  இந்நிலையில். இன்று முன்னாள் அதிகாரி பொன் மாணிக்கவேல் தம்மிடம் இருந்த சிலைக் கடத்தல் வழக்குகளின் அனைத்து ஆவணங்களையும் தமிழக  அரசிடம் ஒப்படைத்துள்ளார்.