டெல்லி
இன்று காலை 7 மணிக்கு டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது.

ருகிற 23-ந்தேதியுடன் 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபையின் பதவிக்காலம் வ நிறைவு பெறுகிறதால் கடந்த மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டு அதன்படி இன்று (புதன்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மொத்தம் 699 பேர் போட்டியில் உள்ள இத்தேர்தலில் ஆம் ஆத்மி, பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நடக்கிறது.
டெல்லி முதல்வர் அதிஷி கல்காஜி தொகுதியிலும், முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் புதுடெல்லி தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள். இதில்அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து பா.ஜனதா சார்பில் பர்வேஷ் வர்மாவும், காங்கிரஸ் சார்பில் சந்தீப் தீட்சித்தும் மோதுகிறார்கள். இவ்விருவரும் முன்னாள் முதல்வர்களின் மகன்கள் ஆவர்..
கல்காஜி தொகுதியில் அதிஷியை எதிர்த்து பா.ஜனதா சார்பில் ரமேஷ் பிதூரியும், காங்கிரஸ் சார்பில் அல்கா லம்பாவும் போட்டியிடுகின்றனர
இன்று டெல்லியில் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தேர்தலை முன்னிட்டு டெல்லிக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. பள்ளி, கல்லூரிகள் செயல்படாது. மதுபானக்கடைகள் மூடப்பட்டுள்ளது. மருத்துவமனைகள், மருந்தகம் போன்ற அத்தியாவசியமான தேவைகளுக்கான நிறுவனங்கள் தவிர மற்ற அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தேர்தலுக்காக மக்களின் போக்குவரத்துக்கு பஸ் மற்றும் மெட்ரோ ரெயில்கள் தங்கு தடையின்றி இயக்கப்பட்டு வருகின்றன.
டெல்லி தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 30 ஆயிரம் டெல்லி போலீசார், 22 ஆயிரம் துணை ராணுவப்படையினர் ஈடுபடுத்தப்பட்டு தீவ்ர கண்காணிப்பு பணிகள் நட்ந்து வருகின்றன. மேலும் ரோந்து பணியில் காவல்துறையினருடன் சீருடை அல்லாத பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.