அலகாபாத்: காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் போட்டியிடும் தொகுதிகளுக்கான தேர்தல் நடந்துவருகிறது.
நாடாளுமன்ற மக்களவைக்கு மே 6ம் தேதி நடைபெறும் 5ம் கட்ட தேர்தலில், உத்திரப்பிரதேச மாநிலத்தின் 14 தொகுதிகளுக்கான உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
இவர்களில், நாம் மேலே சொன்ன 3 முக்கியமான வேட்பாளர்கள் அடக்கம். மொத்தம் 80 மக்களவைத் தொகுதிகள் கொண்ட உத்திரப்பிரதேசத்தில், ஏற்கனவே நடந்து முடிந்துள்ள 4 கட்ட தேர்தல்களில், 39 தொகுதிகளுக்கு தேர்தல்கள் முடிந்துள்ளன.
தற்போது, 5ம் கட்ட தேர்தல் நடைபெறும் அம்மாநிலத்தின் 14 தொகுதிகளில், மோகன்லால்கன்ஜ் மற்றும் கெளசாம்பி ஆகிய 2 தொகுதிகள் தனித் தொகுதிகளாகும்.