மும்பையில் நேற்று நடைபெற்ற IPL 2016இன் 24வது போட்டி , மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் கொல்கத்தா அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தார் .
கொல்கத்தாவின் துவக்க வீரர்கள் , கம்பீர் மற்றும் உத்தப்பா ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 7.4 ஓவர்களில் 69 ரன்களை சேர்த்தனர். உத்தப்பா அவுட் ஆனா பின்னர் கம்பீர் அரை சதம் அடித்தார் அவர் 59 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். மற்ற வீரர்கள் தலா 20 மேற்பட்ட ரன்களை எடுத்தனர்.20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா 174 ரன்கள் எடுத்தனர்.
PhotoGrid_1461898864113
 
வெற்றி பெற 175 ரன்கள் தேவை என்ற நிலையில் , மும்பையின் ரோஹித் மற்றும் பார்த்திவ் படேல் துவக்க ஆட்டக்காரளாக களம் இறங்கினர். படேல் சொற்ப ரன்களுக்கு அவுட் ஆன பின்னர் ரோஹித் மற்றும் ராயுடு ஜோடி , மும்பை அணியின் ஸ்கோரை நிலைநிறுத்தினார் . ராயுடு அவுட் ஆன பின்னர் ரோஹித் மற்றும் பொல்லார்ட் ஜோடி மும்பையின் வெற்றியை உறுதி செய்தனர். பொல்லார்ட் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் 17 பந்துகளில் , 51 ரன்கள் எடுத்தார் இதில் 6 சிக்ஸர்களும் 2 பௌண்டரிகளும் அடங்கும். ரோஹித் கடைசிவரை அவுட் ஆகாமல் 68 ரன்களை எடுத்தார்
கொல்கத்தா 174 /5 ( கம்பீர் 59 , உத்தப்பா 36 சௌதீ 2/38 ) மும்பை 178 /4 (18 ஓவர்கள்) ( ரோஹித் 68* , பொல்லார்ட் 51* , ராயுடு 32 , சுனில் நரைனே 2/22 ) மும்பை 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி