கோவை:

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக, பாதிக்கப்பட்டவர்கள் சிபிஐ சிஐடி அலுவலகத் தில்  தகவல் தெரிவிக்கலாம் என்று  சிபிசிஐடி தொலைபேசி எண் மற்றும் இமெயில் அட்ரஸ் தெரிவித்திருந்த நிலையில், இதுவரை 100க்கும் மேற்பட்டோர் புகார் அளித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் பிரளயத்தை ஏற்படுத்தியுள்ள குலைநடுங்க வைக்கும் பொள்ளாச்சி பாலியல் கொடுமை செய்த  கும்பலை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தி  தொடர் போராட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

இது தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள், பொதுமக்கள் எவரும் சிபிசிஐடி அலுலகத்தில், நேரிலோ,  கடிதம் மூலமோ அல்லது மொபைல் எண், இமெயில் முகவரியும் புகார் கொடுக்கலாம் என அறிவிக்கப் பட்டது.

நேற்று முன்தினம் மாலை சிபிசிஐடி காவல்துறையினர் அறிவித்த மொபைல் எண்ணுக்கு இது வரை  118 பேர் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதில், பாதிக்கப்பட்ட பெண்கள், வழக்கு தொடர்பாக கூடுதல் விவரங்கள் தெரிந்தவர்கள் என பலர் புகார் கூறியுள்ளதாக  தெரிகிறது.

ஆனால், அதை உறுதி செய்ய மறுத்த சிபிசிஐடி காவல்துறையினர், புகார் மற்றும் தகவல்கள் தெரிவிப்பவர்கள் குறித்து முறையாக பதிவு செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர். கடந்த 24மணி நேரத்தில 100க்கும் மேற்பட்டோர் புகார் அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த புகாரின் எண்ணிக்கைமேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொள்ளாச்சி பாலியல்  தொடர்பாக புகார் கொடுக்க வேண்டிய அட்ரஸ்

அலுவலக முகவரி:

காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம், குற்றப்பிரிவு, குற்றப்புலனாய்வுத்துறை

நெ.800, அவிநாசி ரோடு, கோயமுத்தூர்-18

இ.மெயில் முகவரி:  Cbcidcbe@gmail.com

புகார் கொடுக்க வேண்டிய தொலைபேசி எண்: 9488442993

பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக உங்களை புகார்களை அனுப்பிவையுங்கள்…