பொள்ளாச்சி:
தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேரை சிபிஐ கைது செய்துள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, அதை வீடியோவாக எடுத்து வைத்து மிரட்டியதற்காக பொள்ளாச்சியை சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் கைதான திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், சபரி ராஜன் உள்ளிட்ட ஐந்து பேரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் இந்த விவகாரத்தில் அரசியல் பிரமுகர்களுக்கும் தொடர்பு இருப்பதாக தெரிய வந்தது. இதையடுத்து, இந்த வழக்கு சிபிஐ விசாரிக்க தொடங்கியது.
இந்த வழக்கில் ஏற்கனவே கைதான ஐந்து பேரும் சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கில் தொடர்புடைய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
[youtube-feed feed=1]