கோவை: குலைநடுங்க வைத்த பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக பிரமுகர் அருளானந்தம் ஜாமின் மனுவை கோவை நீதிமன்றம் தள்ளுப செய்தது.

கடந்த 2018ம் ஆண்டு தமிழகத்தையே தலைகுனிய வைந்தது பொள்ளாச்சி பாலியல் சம்பவம். பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞர்கள் பலர் கைது செய்தனர். இந்த வழக்கு கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக திருநாவுக்கரசு, ரிஸ்வான் , வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் உள்பட பலர் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த ஜனவரியில் அதிமுக பிரமுகர் அருளானந்தம் என்பவரையும் சிபிஐ கைது செய்து சிறையில் அடைந்துள்ளது. அவருடன், பொள்ளாச்சி வடுகபாளையத்தைச் சேர்ந்த பு, ஆச்சிப்பட்டி ஹேரேன்பால் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், ஜாமீன்கோரி அருளானந்தம் கோவை மகளிர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவருக்கு ஜாமின் கொடுக்க சிபிஐ தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவரது ஜாமின் மனுவை நீதிபதி நிராகரித்தார்.
[youtube-feed feed=1]