ராமேஸ்வரம்:

னது அரசியல் பயணத்தை இன்று தொடங்கி உள்ள நடிகர் கமலஹாசன், இன்று காலை அப்துல் கலாம் வீட்டுக்கு சென்று அவரது சகோதரரிடம் ஆசி பெற்றார்.

அதைத்தொடர்ந்து, ராமேஸ்வரம் பகுதியில் உள்ள மீனவர்களை சந்திக்க திட்டமிட்டிருந்தார். அதன்படி ராமேஸ்வரத்தில் உள்ள கணேஷ் மஹாலில் மீனவர்கள் குழுமியிருந்தனர். கமலுடன் மனு கொடுக்கவும், தங்களது பிரச்சினைகள் குறித்து உரையாடவும் ஏராளமானோர் வந்திருந்தனர்.

அவர்களை சந்தித்து பேசிய கமல், எனது உயிரினும் மேலான மீனவர்களை சந்திக்க வந்திருக்கிறேன்.  தமிழகத்தில் முக்கியமான தொழில்களில் மீன்பிடித் தொழிலும் ஒன்று என்றும்,  மீனவ தொழில் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.  ஆட்சியர்கள் வாக்குறுதிகளை அள்ளிவீசி விட்டு நிறைவேற்றவில்லை என்றும் குறை கூறினார்.

அப்படிப்பட்ட தொழிலை தமிழக மீனவர்கள் பாதுகாப்புடன் செய்ய வேண்டும் என்பதே எனது விருப்பம் என தெரிவித்தார்.

மேலும் மீனவர்களின் பிரச்னையை பற்றி பேசும்போது, வேறு முன்னிலைப்படுத்தப்படுகிறது. ஆட்சியாளர்கள் வாக்குறுதிகளை அளித்துவிட்டு, அதை நிறைவேற்றவில்லை என கமல் குற்றம்சாட்டினார்.

சுமார்  2 நிமிடங்கள் மட்டுமே மீனவர்களிடம் பேசிவிட்டு, மீண்டும் வேறு ஒரு நாளில் வந்து மீனவர்களுடன் கலந்துரையாடுவதாக கூறிவிட்டு அங்கிருந்து  புறப்பட்டு சென்றார் கமல்.