
சென்னை,
அடுத்த மாதம் 21ந்தேதி அரசியல் கட்சியின் பெயர் அறிவிக்க உள்ள நிலையில் நடிகர் கமலஹாசன் தனது நற்பணி மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
இன்றுராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய 4 மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளோடு தனது ஆழ்வார்பேட்டை வீட்டில் கமல்ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஏற்கனவே அரசியலுக்கு வருவதாக அறிவித்த நடிகர் கமலஹாசன் இந்த ஆண்டு முதல் தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக தெரிவித்திருந்தார். அதையடுத்து வரும் பிப்ரவரி 21ம் தேதி, தனது கட்சி குறித்த அறிவிப்பை, முன்னாள் ஜனாதிபதி, அப்துல் கலாம் பிறந்த மண்ணான, ராமநாதபுரத்தில் இருந்து தனது முதல் அரசியல் அடியை எடுத்து வைக்க இருப்பதாக கூறி உள்ளார்.
இதன் முன்னோட்டமாகவும், முதல்கட்டமாகவும் இன்று ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, விருதுநகர் மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகி களோடு இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். காலை 11 மணி அளவில் இந்த கூட்டம் தொடங்கியதாகவும், இந்த கூட்டத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகள் பங்குபெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
[youtube-feed feed=1]