சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், தேர்தல் பிரசாரத்தின்போது கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை அரசியல் கட்சிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்று சென்னை  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தேர்தல் பிரச்சாரத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று மதுரையை சேர்ந்த ஜலாவுத்தீன் என்பவர் உயர்நீதிமன்ற்ம மதுரை கிளையில் பொதுநல வழக்கை தொடுத்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையைத் தொடர்ந்து, தமிழகத்தில் தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கி விட்டதால், வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினரின் தேர்தல் பிரசாரத்திற்கு தடை விதிக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள், ஆனால்,  கொரோனா பரவல் தடுப்பு விதிகளை அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் உறுதிபடுத்த வேண்டுமென  அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தது.

[youtube-feed feed=1]