சென்னை: தமிழ்நாட்டில், சாலையோரம் நடப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றதின் தீர்ப்பிற்கு இடைக்கால தடை விதித்துள்ளது.

முன்னதாக, மதுரையில் இரு இடங்களில் அதிமுக கொடிக் கம்பம் அமைக்க அனுமதி கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த தனி நீதிபதி, தமிழகம் முழுவதும் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், அமைப்புகள், சங்கங்களின் கொடி கம்பங்களை அகற்ற காலக்கெடு விதித்து உத்தரவிட்டார். மேலும் இந்த உத்தரவை எதிர்த்து பல்வேறு கட்சிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன. உயர் நீதிமன்றமும் இந்த உத்தரவை உறுதி செய்தது.
உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக சி.பி.எம் கட்சி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரிக்கப்பட்டது. அப்போது உச்சநீதிமன்றம் சாலையோரம் வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை அகற்றும் விவகாரத்தில் முன்னதாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. மேலும் , தொடர்பாக தமிழ்நாடு அரசு பதில் அளிக்கவும் நோட்டீஸ் பிறப்பித்து வழக்கை ஒத்தி வைத்துள்ளது
முன்னதாக, தமிழகம் முழுவதும் பொது இடங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் உள்ள கொடிக்கம்பங்களை வரும் ஏப். 21-ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு பல அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. மேலும், இதை எதிர்த்து பல அரசியல் கட்சகிள் வழக்குகள் தொடர்ந்துள்ளன. அதை விசாரித்த உயர்நீதிமன்ற அமர்வும், கொடிக்கம்பங்களை அகற்றும் உத்தரவை உறுதி செய்தன. மேலும் கொடிக்கப்பங்கள் குறிப்பிட்ட காலத்தற்குள் அகற்றப்பட வேண்டும், அவ்வாறு அகற்றப்படவில்லை எனில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைச் சந்திக்க நேரிடும்”எனவும் எச்சரித்தது. இதனால் பல இடங்களில் கொடிக்கம்பங்களை சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியினரே அகற்றி வருகின்றனர்.