லக்னோ:

ர்நாடகா மாநிலத்தில் கடந்த இரண்டு வாரங்களாக நிலவி வரும் அரசியல் மாற்றங்கள், நிகழ்வுகள், ஜனநாயகத்தின் இருண்ட அத்தியாயம் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கடுமையாக சாடியுள்ளார்.

குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசுக்கு எதிராக சில எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கிய நிலையில்,  கடந்த இரண்டு வாரமாக கர்நாடகாவில் பரபரப்பு நிலவி வந்தது. நேற்று சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியுற்ற குமாரசாமி அரசு கவிழ்ந்தது. அதைத்தொடர்ந்து, தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து கொடுத்தார்.

இந்த வாக்கெடுப்பின்போது, அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர் மகேசுக்கு தலைவர் மாயாவதி அறிவுறுத்தி இருந்த நிலையில், அவர், நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்காமல் எஸ்கேப் ஆனார். இதன் காரணமாக, அவரை கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டார்.

கர்நாடக நிலவரம் குறித்து டிவிட் பதிவிட்டுள்ள மாயாவதி,  அதிகாரம் மற்றும் பணபலத்தால் பாஜக நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றுள்ளது. இது ஜனநாயக வரலாற்றின் இருண்ட அத்தியாயம் என காட்டமாக பதிவிட்டுள்ளார்.