டிவிட்டரில் அரசியல் விளம்பரங்களுக்குத் தடை : நிறுவனர் அறிவிப்பு

Must read

நியூயார்க்

டிவிட்டரில் இனி அரசியல் விளம்பரங்களுக்கு அனுமதி கிடையாது என அந்த தள நிறுவனர் ஜாக் டோர்சி தெரிவித்துள்ளார்.

 

கடந்த 2014 ஆம் வருடம் நடந்த மக்களவைத் தேர்தலின் போது இந்தியா முழுவதும் சமூக வலைத்தளங்களில் பாஜக மிக வேகமாக வளர்ந்தது. அப்போது  அது குஜராத் மாடல் என்ற பெயருடன் நாடெங்கும் பரவியது. பாஜக  தொடர்பான கட்டுரைகள் சமூக வலைத்தளங்களில் தினமும் வெளியானது.

ஜாக் டோர்சி

இதைப் போல் அமெரிக்காவில் 2016ல் நடந்த அதிபர் தேர்தலின் போது டிரம்ப் குறித்த கட்டுரைகள் நிறைய வெளியானது. மேலும் டிரம்ப் மிகவும் திறமை வாய்ந்தவர் என்று கட்டுரைகள் முகநூல் மூலமும், டிவிட்டர் மூலமும் வைரலாக பரவி அவருடைய வெற்றிக்கு உதவியது.  குறிப்பாக முகநூல் டிரம்பிற்கு ஆதரவாக அரசியல் ரீதியாக நிறைய விளம்பரங்கள் செய்தது.

இதற்காக கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா என்ற நிறுவனம் மூலம் தகவல்கள் திரட்டப்பட்டு, மக்களின் மனதை மாற்றும் வகையில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. வரம்பிற்குத் தேர்தலின் போது இவை பெருமளவில் உதவியதாகப் பெரிய குற்றச்சாட்டு உள்ளது. இந்த விளம்பரங்களுக்குப் பின் ரஷ்யா இருப்பதாகவும் புகார் உள்ளது.

அடுத்த வருடம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போது டிவிட்டர் நிறுவனர்  ஜாக் டோர்சி இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார். அவரது இந்த முடிவை  அமெரிக்க எதிர்க்கட்சிகள் பெரிய அளவில் வரவேற்று இருக்கிறார்கள். இதேபோல் முகநூலும் முடிவை எடுக்குமா என்று கேள்விகள் எழ தொடங்கி உள்ளது.

More articles

Latest article