சென்னை

ரும் பிப்ரவரி 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது.

தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் சிறப்பாக நடைபெறுவதால்  தொடர்ந்து 18 ஆண்டுகளாக போலியோ இல்லாத நிலையை நமது மாநிலம்  அடைந்துள்ளது.  இதை தக்க வைத்துக் கொள்ளவும், குழந்தைகளைப் போலியோ வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாப்பதும் மிகவும் இன்றியமையாததாகும். ஆகவே, பெற்றோர்கள் மத்திய மாநில அரசுகள்  ஒவ்வொரு வருடமும் போலியோ சொட்டு மருந்து முகாம்களை அமைத்து வருகிறது.

தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை,

“வரும் 27 ஆம் தேதி அதாவது ஞாயிறு அன்று தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்.   இந்த முகாம்கள் தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆரம்பச் சுகாதார மையாக்கள், அரசு மருத்துவமனைகள், சத்துணவு மையங்கள், பள்ளிகள், முக்கிய ரயில் நிலயங்கள், உள்ளிட்ட 43,051 இடங்களில் நடைபெற உள்ளன.

இந்த மையங்கள் மூலம் சுமார் 47.36 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  இந்த முகாம் பணிகளுக்கு யுனிசெஃப், உலக சுகாதார நிறுவனம் மற்றும் பன்னாட்டு ரோட்டரி சங்கங்கள் உறுதுணையாக உள்ளன.

முகாம்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.  இங்கு 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.  இங்கு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளான முகக் கவசம், சமூக இடைவெளி,கை கழுவுதல் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

இங்கு வரும் பெரியவர்கள் அல்லது குழந்தைகளுக்கு காய்ச்சல் அல்லது இருமல் போன்ற கொரோனா அறிகுறிகள் இருந்தால் மையங்களுக்குள் அனுமதி கிடையாது.  கூட்டமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். 

போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட வேண்டிய குழந்தையுடன் ஒரு நபர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். சொட்டு மருந்து அளிக்கப்படும் குழந்தைகளின் இடது கை சுண்டு விரலில் அடையாள மை வைக்கப்படும்”

என அறிவித்துள்ளது.