டில்லி
நாடெங்கும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் போலியோ சொட்டு மருந்து முகாம் ஜனவரி 23;லிருந்து பிப்ரவரி 27 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
நாடெங்கும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 2,38,018 பேர் பாதிக்கப்பட்டு 310 பேர் உயிரிழந்து 1,57,421 பேர் குணம் அடைந்துள்ளனர். மொத்தம் 3,76,18,271 பேர் பாதிக்கப்பட்டு 4,86,761 பேர் உயிரிழந்து 3,53,94,882 பேர் குணமாகி உள்ளனர். 17,36,628 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இதையொட்டி நாடெங்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலாக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு நாட்களில் மக்கள் வெளியே வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜனவரி 23 ஆம் தேதி ஞாயிறு அன்று நாடெங்கும் உள்ள குழந்தைகளுக்காகப் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படும் என அரிவிக்கபப்ட்டிருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக மாநில அரசுகள் ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த முகாம் நடத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டன.
மத்திய அரசு இதை ஒப்புக் கொண்டுள்ளது. இதையொட்டி வரும் ஜனவரி மாதம் 23 ஆம் தேதி நடைபெற இருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் வரும் பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.