
‘ஓ.பன்னீர் செல்வத்தை தோற்கடிக்க வேண்டும் ஏன்?’ என்ற தலைப்பில் துண்டறிக்கை விநியோகித்த தமிழ்நாடு இயற்கை வள பாதுகாப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முகிலனை காவல்துறையினர் கடுமையாக தாக்கினர்.
இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சுழலை பாதுகாக்கவும், ஊழலை ஒழிக்கவும் செயல்படும் பல்வேறு அமைப்புகள் இணைந்து இயற்கை வன பாதுகாப்பு கூட்டமைப்பை ஏற்படுத்தினர். அப்போது, கடந்த 5 ஆண்டுகளில் இயற்கை வளங்களை அழித்து, சுற்றுச்சுழலை மாசுபடுத்த துணை நின்ற அரசியல்வாதிகளை சட்டமன்ற தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், நியூட்ரினோ திட்டத்திற்கு மறைமுகமாக ஆதரவு தெரிவித்தும், தமிழகம் முழுவதும் ஆற்றுமணல் கொள்ளைக்கு காரணமாக இருக்கும் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை தோற்கடிப்போம் என்று முடிவு செய்தனர்.

அதன்படி, முகிலன் தலைமையில் மதுரை நாணல் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த இருபது பேர், போடி தொகுதிக்கு உட்பட்ட தேனி பழைய, புதிய பேருந்து நிலையம், தேனி கடைத்தெருக்களில் ஓபிஎஸ்-க்கு எதிரான துண்டறிக்கையை மக்களிடம் விநியோகித்தனர். அப்போது,, அங்கு வந்த போடி காவல்துறை ஆய்வாளர் பா.சேகர், தலைமை காவலர் ஆகியோர் சேர்ந்து முகிலனை ஆபாச வார்த்தைகளால் வசைபாடி சரமாரியாக அடித்து உதைத்தனர்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Patrikai.com official YouTube Channel