சேலம்,

சேலம் மாவட்டம் கட்சராயன்பாளையம் ஏரியை பார்வையிட மு.க.ஸ்டாலினுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஸ்டாலின் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். இதன் காரணமாக அந்தபகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

சேலம் மாவட்டம் கட்சராயன்பாளையம் பகுதியல் உள்ள ஏரியை திமுக சார்பாக தூர் வாரப்பட்டது. இந்த பகுதி முதல்வர் எடப்பாடியின் தொகுதி என்பதால், இதில் அரசியல் விளையாட தொடங்கியது.

இந்நிலையில் ஏரியை பார்வையிட மு.க.ஸ்டாலின் சேலம் வருவதாக கூறினார். அதைத் தொடர்ந்து இன்று ஸ்டாலின் சேலம் புறப்பட்டார்.

இந்நிலையில், கோவை சென்ற ஸ்டாலின் அங்கிருந்து கார் மூலம் சேலம் சென்றார். இடையில், கணியூர் சோதனை சாவடியில் ஸ்டாலின் தடுத்து நிறுப்பட்டுள்ளார். சேலம் செல்ல விடாமல்  அவரை  போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதையறிந்த திமுகவினர்  கணியூர் சோதனை சாவடி அருகே ஆயிரக்கணக்கில் குவிந்து வருகின்றனர். திமுகவினர் போலீசாருடன்  வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

இதைத்தொடர்ந்து ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால், ஸ்டாலின் செல்ல  அனுமதி மறுக்கப்பட்டதாக சேலம் எஸ்.பி ராஜன் தெரிவித்துள்ளார்.