சென்னை
சென்னை, தாம்பரம், ஆவடி என மூன்றாகப் பிரிக்கப்பட்ட காவல்துறை ஆணையர் அலுவலகங்களுக்கான காவல் நிலையங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.
மாநகர காவல்துறையில் ஒரு ஆணையர், 4 கூடுதல் ஆணையர்கள், 7 இணை ஆணையர்கள், மத்திய குற்றப்பிரிவு ஆணையர்கள், நிர்வாக ஆணையர்கள் என 28 பேர் தலைமையில் 137 காவல்நிலையங்கள் பிரிக்கப்பட்டன. இவற்றை ந்ரிவாக வழதிக்காகவும் ஒவ்வொரு மாநகராட்சிக்கும் ஒரு காவல் ஆணையர் அலுவலகம் என்னும் அடிப்படையில் தமிழக அரசு 3 ஆம பிரிக்கப்பட்டது.
அதாவது சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகம், தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அலுவலகம், ஆவடி மாநகர காவலர் ஆணையர் அலுவலகம் என 3 ஆக பிரிக்கப்பட்டது
தாம்பரம் காவல் ஆணையரகத்தில் சிறப்பு அதிகாரியாகக் கூடுதல் டிஜிபி ரவி, ஆவடி காவல் ஆணையரகத்தின் சிறப்பு அதிகாரியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து 3 மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தின் காவல் நிலையங்கள் எவை என்று பிரித்து பட்டியல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை மாநகர காவல் துறை ஆணையர் கட்டுப்பாட்டில் அதாவது சென்னை மாவட்டத்தில் பூக்கடை காவல் நிலையம் முதல் ராயிலா நகர் காவல் நிலையங்கள் வரை மொத்தம் 104 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்கள் பிரிக்கப்பட்டுள்ளது.
ஆவடி மாநகர காவல் ஆணையர் கட்டுப்பாட்டில், பால் பண்ணை, செங்குன்றம், மணலி, சாந்தாங்காடு, மணலி புதுநகர், எண்ணூர் என சென்னை மாவட்டத்தில் 20 காவல் நிலையங்கள் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் விலவங்காடு, செவ்வாய்பேட்டை, சோழவரம், மீன்சூர், காட்டூர் என 5 காவல் நிலையங்கள் என மொத்தம் என 25 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்கள் பிரிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் காவல் ஆணையர் கட்டுப்பாட்டில் தாம்பரம், குரோம்பேட்டை, கானாத்தூர் என சென்னை மாவட்டத்தில் 13 காவல் நிலையங்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சோமங்கலம், மணிமங்கலம் என 2 காவல் நிலையங்கள், செங்கல்பட்டு மாவட்டத்தில் ஓட்டேரி, கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், தாழம்பூர், கேளம்பாக்கம் என 5 காவல் நிலையங்கள் என மொத்தம் 20 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்கள் பிரிக்கப்பட்டுள்ளது.