சென்னை: குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய திமுக இளைஞர்அணியைச் சேர்ந்த ஒருவரின் வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்ததால், மனம் உடைந்தவர், வீட்டிற்கு போய் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில், கொலை, கொள்ளை போன்ற அசம்பாவிதங்களை தடுக்க, வாகன தணிக்கையில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அப்போது மது அருந்திவிட்டு, வாகனம் ஓட்டுவோரிடம் அபராதம் வசூலிக்கின்றனர். அபராதம் செலுத்த மறுப்பவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் செலுத்தியதும் விடுவிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நேற்று இரவு, திமுக இளைஞர் அணி தலைமை அலுவலகத்தில் பணிபுரியும் திமுக நிர்வாகியான சென்னை எம்ஜிஆர் நகர் கன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நிஷாந்த் (24) என்பவர், தனது நண்பர்களுடன் எம்ஜிஆர் நகர் அஜந்தா பஸ் பேருந்து நிலையம் அருகே மது அருந்திவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு வந்து சென்றுகொண்டிருந்தார்.
அப்போது அந்த பகுதியிலு வாகன பரிசோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த காவல் துறையினர் அவரை பரிசோதனை செய்தனர். அப்போது அவர் அளவுக்கு அதிகமாக குடித்து விட்டு வாகனம் ஓட்டி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து போக்குவரத்து காவல் துறையினர் அவரிடம் அபராதம் செலுத்த கூறியுள்ளனர். ஆனால், அவர் அபராதம் செலுத்தாமல், தகராறு செய்ததால், காவல்துறையினர் வாகனத்தை பறிமுதல் செய்துவிட்டு, காலையில் காவல் நிலையம் வந்து அபராதம் கட்டி வாகனத்தை எடுத்துச் செல்லுமாறு கூறியுள்ளனர்.
இதனால் கடுமையான மனஉளைச்சலுக்கு ஆனா நிஷாந்த், வீட்டுக்கு சென்றபிறகு, காவல்துறையினரின் நடவடிக்கையை விமர்சித்ததுடன், அவரது மனைவியிடமும் தகராறு செய்துள்ளார். இதையடுத்து, மனமுடைந்த நிலையில், இரவு வெகுநேரம் தூங்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதை அவரது மனைவியும் கண்டுகொள்ளாமல் தூக்க சென்றுள்ளார். இந்த நிலையில், தன்னை காவல்துறையினரும் மதிக்கவில்லை, மனைவியும் மதிக்கவில்லை என்று புலம்பிய நிலையில், திடீரென வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அதிகாலை விழித்த மனைவி கணவனை காணவில்லை என்று பார்த்தபோது, அவர் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவரது சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், இது தொடர்பான காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எம்ஜிஆர் நக காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.