அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது.

சியாட்டில் நகரில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பல்வேறு சாலைகள் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளதோடு பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அவசர உதவிக்கு கூட மீட்பு மற்றும் மருத்துவத்துறையினரால் உடனடியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியிருந்தது.

வாட்காம் கவுன்டியில் வெள்ள நீரில் சென்ற ஒருவர் ஞாயிறன்று இரவு அடித்துச் செல்லப்பட்டதாகவும் அவரது காரில் இருந்து 300 மீட்டர் தொலைவில் இருந்த மரக்கிளையில் தொங்கிக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

பின்னர் அவர் மாயமானதால் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டிருக்ககூடும் என்று மீட்புப் படையினர் தேடி வருகின்றனர்.