பாங்காங் மருத்துவமனையில் குண்டுவெடிப்பு! 25க்கும் மேற்பட்டோர் காயம்!!

Must read

பாங்காங்,

பாங்காங் மருத்துவமனை ஒன்றில் இன்று திடீரென குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் உள்பட 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

இந்த குண்டுவெடிப்பு குறித்து பாங்காக் ராயல் தாய் போலீசார் கூறியதாவது,

குண்டுவெடிப்பு குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், குண்டு வெடிப்புக்கு பயன்படுத்திய பேட்டரி, வயர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி உள்ளார்.

இந்த குண்டுவெடிப்பு குறித்து போலீஸ் ஜெனரல் ரான்ஷிபிரம்மனகுள் கூறும்போது, குண்டு வெடிப்பில் காயமடைநத்வர்கள் பாரமோன்குட்லோ  (Phramongkutklao) மிலிட்டரி மருத்துவமனை எனப்படும் கிங் மாங்குட் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், குண்டு வெடிப்பு குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.

 

 

More articles

Latest article