காதல் படுத்தும் பாடு: இளவரசி பட்டத்தை துறக்கும் ஜப்பான் இளவரசி!

Must read

 

டோக்கியோ,

னது காதலரை கரம்பிடிக்க விரும்பி, தனது இளவரசி பட்டத்தை துறக்க முன்வந்துள்ளார் ஜப்பான் இளவரசி மாகோ.

ஜப்பான் பேரரசர் அக்கிஹியோவின் பேத்தி மற்றும் பிரின்ஸ் அக்ஷினோவின் மூத்த மகள், இளவரசி மாகோ. இவருக்கு வது  25.

இவர் கல்லூரியில் படிக்கும்போது தன்னுடன் படித்து வருபவரின்  காதல் வளையில் வீழ்ந்தார். தற்போது அவர் தான் காதலித்து வரும் நபரையே திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார்.

இதன் காரணமாக அவர் தனது இளவரசி படத்தை தியாகம் செய்கிறார்.

ஜப்பான் அரசர் குடும்பத்தினர்

இளவரசியின் மாகோவின்  காதலன் பெயர் கெய் குமுரோ. இருவரும் டோக்கியோவில் உள்ள சர்வதேச கிறிஸ்தவ கல்லூரியில் படிக்கும்போதே காதலித்து வந்துள்ளனர்.

இதுகுறித்து இளவரசி தனது பெற்றோரிடம் தெரிவித்துவிட்டதாகவும், அரச குடும்பத்தினரும் அவரின் காதலுக்கு சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், ஜப்பான் குடும்ப வழக்கப்படி, அரச குடும்பத்து பெண்கள், அதுபோல அரச குடும்பத்தின ரைதான் திருமணம் செய்ய வேண்டும். சாதாரண நபரை திருமணம் செய்ய முடிவு செய்தால், அவர்களின் அரச பட்டத்தை துறக்க வேண்டும். மீறினால் அவர்களது குடும்ப பட்டம் பறிக்கப்படும்.

காதலன் கெய் குமுரோ.   இளவரசி மாகோ…..

தற்போது இளவரசி மாகோ தனது காதலரான சாதாரண நபரை கைபிடிக்க முன்வந்திருப்பதால், தனது இளவரசி பட்டத்தை துறக்க முடிவு செய்துள்ளார்.

தற்போது ஜப்பானின் ஹாட் டாபிக் இளவரசியின் காதல்தான்….

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article