டில்லி
ஓடும் பள்ளிப் பேருந்தை நிறுத்தி கடத்தப்பட்ட சிறுவனை காவல்துறையினர் மீட்கும் போது கடத்தியவர்களில் ஒருசர் துப்பாக்கி சூட்டில் மரணம் அடைந்துள்ளார்.
டில்லியில் கடந்த மாதம் ஜனவரி 25ஆம் தேதி அன்று தில்ஷாத் கார்டன் பகுதியில் ஒரு பள்ளிப் பேருந்து சென்றுக் கொண்டிருந்தது. அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள் வண்டியை நிறுத்தி ஓட்டுனரை துப்பாக்கியால் சுட்டனர். அதன் பின் அந்த பேருந்தில் இருந்த ரேஹன் என்னும் ஐந்து வயதுச் சிறுவனை கடத்திச் சென்றனர். காவல்துறையினர் அந்த சிறுவனை மும்முரமாக தேடி வந்துள்ளனர்.
இந்த தேடுதல் வேட்டை சுமார் இருவாரங்களாக நடைபெற்றுள்ளது. இந்நிலையில் காசியாபத் பகுதியில் உள்ள ஷாலிமார் சிடி அடுக்கு மாடி குடியிருப்பில் சிறுவன் அடைத்து வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. நேற்று இரவு சுமார் 1 மணிக்கு காவல்துறையினர் அந்த கட்டிடத்தை வளைத்துள்ளனர். அப்போது கடத்தல் காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே துப்பாக்கி சூடு நடந்துள்ளது.
இந்த துப்பாக்கி சூட்டில் கடத்தல் காரர்களில் ஒருவர் மரணம் அடைந்தார். இருவர் குண்டு அடி பட்டு தேஜ் பகதூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடத்தல் காரர்கள் சுட்டதில் ஒரு காவலரின் குண்டு துளைக்கத அங்கி சேதமடைந்துள்ளது. அடிபட்டவர்கள் சுய நினைவு திரும்பிய உடன் விசாரணை தொடரும் என காவல்துரை அறிவித்துள்ளது.