விழுப்புரம்: நடிகர் விஜயின் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள அந்த மாநாடு தொடர்பாக 21 கேள்விகளை எழுப்பி, அதற்கு 5 நாட்களுக்குள்பதில் அளிக்க தவெகவுக்கு விழுப்புரம் மாவட்ட காவல்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

தவெக கட்சியின் முதல் மாநாடு வரும் 23ஆம் தேதி நடத்துவதற்கு திட்டமிட்டு, அதற்கு அனுமதி கேட்டு கோரி, தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் , விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  அனுமதி மற்றம் பாதுகாப்பு கேட்டு கடிதம் கொடுத்தனர்.

இதை ஆய்பு செய்த மாவட்ட காவல்துறை,   மாநாடு முன்னேற்பாடு தொடர்பாக 21 கேள்விகளை எழுப்பி  உள்ளது. இதற்கு  5 நாட்களுக்குள் பதில் அளிக்கும்படி அவகாசமும் அளிக்கப்பட்டுள்ளது.

2026 சட்டமன்ற தேர்தலில் களமிறங்கும் வகையில் தீவிர அரசியலில் நடிகர் விஜய் இறங்குவதாக அறிவித்து உள்ளார். இதையடுத்து, கட்சியை மேலும் பிரபலப்படுத்த  தவெகவின் முதல் மாநாட்டினை   விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை பகுதியில் நடத்த திட்டமிட்டுள்ளார். வரும் 23ந்தேதி மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

இதைத்தொடர்ந்து, மாநாடு நடத்த   அனுமதி கேட்டு, விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடிதம் வழங்கப்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர்  மாநாடு நடைபெறும் இடத்தை நேரில் சென்றும் பார்வையிட்டனர்.

இதைத்தொடர்ந்து,  மாநாட்டு நிகழ்ச்சி நிரல் மற்றும் விஜய் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வந்து செல்வதற்கான வழி, வாகனங்கள் வந்து செல்லும் வழி, வாகன நிறுத்துமிடம், உணவு, கழிவறை உள்ளிட்ட முன்னேற்பாடுகள் குறித்து 21 கேள்விகள் எழுப்பி விக்கிரவாண்டி காவல்துறையினர் தவெக கட்சியினருக்கு கடிதம் வழங்கியுள்ளனர்.

மாநாட்டில் கலந்துகொள்ள வருபவர்களக்க தேவையான  பார்கிங் வசதி, கழிவறை, பாதுகாப்பு நடவடிக்கைகள். வயதானவர்கள், குழந்தைகள், பெண்கள் மாநாட்டிற்கு வருகை புரிந்தால் குடிநீர் வசதி, மருத்துவம் பார்க்க ஆம்புலன்ஸ் வசதி எங்கு செய்யப்படுகிறது  உள்பட  21 கேள்விகளை எழுப்பி விழுப்புரம் டி எஸ் பி பார்த்திபன் தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுசெயலாளர் அனந்த்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்  கொடுத்துள்ளார்.

என 21 கேள்விகள் எழுப்பட்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளன?என்பன உள்ளிட்ட 21 கேள்விகள் இடம் பெற்றுள்ளன.இதற்கு கேள்விகளுக்கு பதில் அளிக்க ஐந்து நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முறையாக பதிலளிக்கும் பட்சத்தில், காவல்துறை அனுமதியை வழங்கும் என கூறப்படுகிறது.