விஜயநாராயணம்:
நெல்லை அருகே விஜயநாராயணம் பகுதியில் மணல் கடத்தலை தடுக்க சென்ற காவலர் மர்மான முறையில் இறந்து கிடந்தார். விசாரணையில் அவர் மணல் மாபியாக்களால் அடித்து கொல்லப்பட்டது தெரிய வ்நததுள்ளது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் விஜயநாரயணம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தவர், நாங்குநேரி அருகே சிந்தாமணிப் பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ்துரை என்பவர், தெற்கு விஜயநாராயணம் காவல் நிலையத்தில், எஸ்.பி.யின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள தனிப்பிரிவு காவலராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், பாண்டிச்சேரி கிராமம் அருகே உள்ள நம்பியாற்றுப் பகுதியில் இரவு நேரத்தில் சிலர் மணல் கொள்ளையில் ஈடுபடுவதாக புகார் வந்துள்ளது. இதையடுத்து அந்த பகுதிக்கு ரோந்து சென்ற காவலரை டிராக்டர் மூலம் மணல் அள்ளியவர்கள் அவரை தாக்கி கொலை செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட எஸ்.பி. அருண்சக்தி குமார், காவலர் கொலை செய்யப்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்தார். இதனிடையே, கொலையாளிகள் குறித்து, தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார், கக்கன் நகரைச் சேர்ந்த முருகன், மாடசாமி ஆகியோரை கைது செய்தனர்.
மேலும், காவலரை கொலை செய்ய இவர்களுக்கு உதவியாக இருந்தவர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.