சென்னை.
எஸ்ஆர்எம் கல்லூரியில் மருத்துவ சீட்டு வாங்கி தருவதாக பலகோடி ரூபாய் மோசடி செய்த மதனுடன் இணைந்து சினிமா தயாரித்த பிரபலங்களையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அவர்  மதனுடன் கூட்டு சேர்ந்து, பண மோசடியில் ஈடுபட்டனரா என விசாரிணை மேற்கொண்டுள்ளனர்., மேலும், சில சினிமா பிரபலங்களிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லுாரியில், ‘சீட்’ வாங்கி தருவதாக, 85 கோடி ரூபாய் மோசடி செய்து, காணாமல்போய் தற்போது கைதாகி உள்ள சினிமா பட அதிபர் ‘வேந்தர் மூவிஸ்’ மதன், திருப்பூரில் தனது பெண் தோழி வர்ஷா வீட்டில் பதுங்கி இருந்த போது கைதானார்.
madha2
அவரிடம்  மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையில், மதனுக்கு, வடபழனியில் இரண்டு வீடும், போரூரில் ஒரு வீடும், அண்ணா நகரில் ஒரு வீடும் உள்ளது தெரிய வந்ததுள்ளது. கோடிக்கணக்கான பெருமானமுள்ள இந்த வீடுகள் ஒன்று தாய் மற்றும் மனைவிகள் பெயரிரும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் கொட்டிவாக்கத்தில் ஒரு வீடும் உள்ளது. அது அவரது சகோதரர் பெயரில் உள்ளதாக தெரிகிறது.
கடந்த சில ஆண்டுகளாக எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லுாரியில் மருத்துவ சீட் வாங்கிய கொடுப்பதில் கோடிக்கணக்கான ரூபாய் விளையாடி உள்ளது. அந்த பணத்தில்தான் மதன் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். மேலும் சினிமா தயாரிப்பிலும் இறங்கினார்.
படதயாரிப்பில் மதனுக்கு ஆதரவாக அம்மா கிரியேஷன்ஸ் பட அதிபர் சிவா ஏழு ஆண்டுகள் இருந்துள்ளார். மேலும், அவரது கல்லுாரி தோழரும் ‘வேந்தர் மூவிஸ்’ பங்குதாரருமான, பாலகுருவும் உடன் இருந்துள்ளார்.
பின்னர் ஏற்பட்டகருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் மதனை  விட்டு பிரிந்து தனியாக படம் தயாரிக்கத் தொடங்கினர்.
சிவாவும், பாலகுருவும் மதனுடன் நெருக்க இருந்திருப்பதால், பல மோசடி குறித்து அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பிருக்கலாம் என சந்தேகத்தில் அடிப்படையில் அவர்களிடம் விசாரணை நடைபெற்றது.
மேலும் சினிமா பைனான்சியர்களான ராம்,  வாசு ஆகியோரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் போலீசார் கூறியதாவது, மதனுக்கு பின்னால் உள்ள சினிமா பிரபலங்கள் குறித்தும், அவனது கள்ளக்காதலிகள், தோழிகளிடமும் விசாரணை மேற்கொள்ள இருக்கிறோம்.
மேலும், மதன் காணாமல் போன அன்று முதல், அவர் கைது செய்யப்படும் வரை அவரிடம் தொடர்பில் இருந்தவர்கள் பற்றியும் தகவல் சேகரித்து விசாரித்து வருகிறோம். மதன் வட மாநிலங்களில் தங்கியிருந்தபோது அவர் பயன்படுத்திய காரும் அடையாளம் காணப்பட்டு உள்ளது.
மதனுக்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் என பல மொழிகள் தெரிகிறது.  இதன் காரணமாக அவன் வட மாநிலங்களிலும் பெண்களுடன் சுற்றி திரிந்துள்ளார்.
மேலும் மருத்துவ சீட் வாங்கி கொடுப்பதாக, மாணவர்களின் பெற்றோர்களிடம் வாங்கிய பணத்தை, கல்லுாரி நிர்வாகத்திடம் கொடுத்து விட்டதாக மதன் கூறியுள்ளார். அதுகுறித்து கல்லுாரியின் முக்கிய நிர்வாகிகளிடம் விசாரிக்க உள்ளோம்.
இவ்வாறு போலீசார் கூறினர்.