சென்னை,

கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தான் சென்ற சென்னை மதுரவாய்ல் காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியன் துப்பாக்கி சூட்டினால் பலியானர். அதையடுத்து,  காவல் ஆய்வாளர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்குவதாக தமிழக முதல்வர் எடப்பாடி  கடந்த ஆண்டு டிசம்பர் 13ந்தேதி அறிவித்தார்.

அதன்படி இன்று, பெரியபாண்டியன் குடும்பத்தினரை தலைமை செயலகம் அழைத்து, அவர்களிடம் ஏற்கனவே அறிவித்த 1 கோடி ரூபாய் நிவாரணத்திற்கு காசோலை வழங்கப்பட்டது.

கடந்த ஆண்டு பட்டப்பகலில், சென்னை ரெட்டேரி அருகே உள்ள நகைக்கடையில் இருந்து நகைகளை கொள்ளை யடித்து சென்ற நகை கொள்ளையர்களை பிடிக்க சென்ற மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி தலைமையில் போலீஸ் குழுவினர் ராஜஸ்தான் சென்றனர்.

இந்நிலையில்  கொள்ளையர்களை பிடிக்க முயற்சி செய்தபோது, சக போலீகாரர் முனிசேகரின் துப்பாக்கி குண்டுக்கு ஆளான  ஆய்வாளர் பெரியபாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அப்போது தமிழக அரசு சார்பாக ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்துக்கு, துப்பாக்கி சூட்டில்  உயிரிழந்த காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் குடும்பத்தினர் அழைத்து வரப்பட்டிருந்தனர். அவர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தனர். அப்போது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பெரியபாண்டியனின் மனைவியிடம் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கி ஆறுதல் கூறினார்.