சென்னை: தமிழகத்தில் அண்மைக்காலமாக என்கவுண்ட்டர் அதிகரித்து வருகிறது. இதற்கு காவல் துறையினர் கூறும் காரணங்கள் நம்பும்படி யாக இல்லை என திமுக கூட்டணி கட்சியான மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின்  மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டி உள்ளார்.

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து சென்னைக்கு புதிய காவல்துறை தலைவராக அருண் நியமிக்கப்பட்டு, சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் பல இடங்களில் போதை பொருள் நடமாட்டம் காரணமாக தகராறுகள் தொடர்ந்து வருகின்றன. இதற்கிடையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் குற்றவாளிகள் 3 பேர் அடுத்தடுத்த என்கவுண்டர் செய்யப்பட்டு உள்ளனர். இதுவும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில்,  நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில். ‘கந்து வட்டிஒழிப்பு’ மாநாடு  நடை பெற்றது. இதில் பங்கேற்று சிறப்புரை அற்றிய  அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், பின்னர் செய்தியாளர் களை சந்தித்தார். அப்போது அவர்  கூறியதாவது,

நாமக்கல் அருகே  பள்ளிபாளையம் விசைத்தறி தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. இங்குள்ள மக்கள் அன்றாடத் தேவைகளுக்காகவும், நிதி பற்றாக் குறைக்காகவும் சில தனியார்நிறுவனங்களிடம் கடன் பெறுகின்றனர்.

கடனை உரிய நேரத்தில் திருப்பி செலுத்தாதபோது, இன்னல்களுக்கு உள்ளாகின்றனர். எனவே, மக்களை கடன் வலையிலிருந்து மீட்கவும், கந்து வட்டி,மைக்ரோ ஃபைனான்ஸ் குழு கடன்களுக்கான வட்டி விகிதங்களை ஆராய்ந்து முறைப்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

பின்னர் செய்தியாளர்கள் காவல்துறையினரின் என்கவுண்டர் குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் கூறியவர்,

தமிழகத்தில் சமீப காலமாக என்கவுன்ட்டர் அதிகரித்து வருகிறது. இதற்கு காவல் துறையினர் கூறும் காரணங்கள் நம்பும்படியாக இல்லை என குற்றம் சாட்டினார்.

அதுபோல, மதுவிலக்கு சர்ச்சை, அதுதொடர்பாக திருமா வெளியிட்ட வீடியோ குறித்த கேள்விகளுக்கு பதில் கூறியவர்,  மதுவிலக்கு என்ற பெயரில், ஒரே நாளில் அனைத்து மதுக்கடைகளையும் மூட முடியாது. போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, போதைப் பழக்கத்திலி ருந்து விடுபடவைத்து படிப்படியாக மதுக்கடைகளை மூட முடியும் என்றார்.

நடிகர் விஜயின் கட்சி மற்றும் மாடு தொடர்பான கேள்விக்கு தவெக மாநாட்டுக்குப் பின்னர், தமிழக அரசியலில் பெரிய மாற்றங்கள் காத்திருக்கிறது என கூறப்படுவது குறித்து கேட்கிறீர்கள். பொறுத்திருந்து பார்க்கலாம் என்றார்.

இலங்கை மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கதையாகிறதே என்ற கேள்விக்கு பதில் கூறியவர்,  இலங்கை ராணுவத்தால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக பிரதமருக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்எழுதியபோதும், உரிய நடவடிக்கை இல்லை. இலங்கையில் தற்போது புதிதாக அமைந்துள்ள அரசிடம் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தி, மீனவர் பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டும் என வலியுறுத்திகார்.