பெங்களூரு

காப்பிடு ஆவணத்தை நகலாக வைத்து பயணித்தவரை போலிஸ் அடித்துள்ளது

தற்போது பெங்களூரு போலீசார் ஒரிஜினல் ஓட்டுனர் உரிமம் மற்றும் காப்புரிமை ஆவணம் இல்லாதவர்களிடம்  சாலையில் அபராதம் வசூலித்து வருகிறது.    பெங்களூருவில் வசிக்கும் மக்கள் ஒரிஜினல் தொலைந்து விடுமோ என்னும் அச்சத்தினால் நகல்களை மட்டுமே வைத்திருப்பது வழக்கம்.     அத்துடன்  வாகன சட்டத்தின் படி சாலையில் ஒரிஜினல் ஆவணங்கள் இல்லாதவர்கள் அதை 15 நாட்களுக்குள் சம்மந்தப் பட்ட அதிகாரிகளிடம் காட்ட வேண்டும் என குறிப்பிடப் பட்டுள்ளது

ஆனால் இந்த விதிகளுக்கு நேர்மாறாக பெங்களூரு காவல் துறையினர் நடந்து வருகின்றனர்.    சமீபத்தில் ஹர்ஷ் ஷா என்னும் மென்பொறியாளர் பெங்களூரு ஒயிட்ஃபீல்ல்ட் பகுதியில் போக்குவரத்து காவல்துறையினரால் நிறுத்தப் பட்டு சோதிக்கப் பட்டுள்ளார்.  அப்போது அவரிடம் காப்பீடு ஆவணங்களின் நகல் மட்டுமே இருந்துள்ளது.   அதனால் அவருக்கு காவல்துறையினர் அங்கேயே ரூ.500 அபராதம் செலுத்த வேண்டும் எனக் கூறி உள்ளனர்.

அனைத்து பரிவர்த்தனைகளும் ஆன்லைன் மூலம் செய்யலாம் என அரசு அறிவித்துள்ளதை சுட்டிக்காடி ஹர்ஷ் தனது அபராதத்தை ஆன்லைன் மூலம் செலுத்துவதாக கூறி உள்ளார்.    அதை மறுத்த காவலர் இருமுறை இவரை கழுத்தில் அடித்துள்ளார்.

இதை ஹர்ஷ் ஷா ஹர்ஷ் தனது டிவிட்டர் பக்கத்தில், “தொழில் நுட்ப நகரத்தில் நகலை வைத்து பயணம் செய்ய முடியாதா?  சட்டப்படி 15 நாட்கள் கொடுக்கப்பட்ட அவகாசத்தை காவல்துறை மதிக்காதா?” எனக் கேட்டுள்ளார்.   இந்த டிவிட்டர் பதிவு பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

நெட்டிசன்கள் பலரும் ஹர்ஷுக்கு ஆதரவாக பின்னூட்டம் இட்டுள்ளனர்.   அதில், “மத்திய அரசு டிஜிடல் ஆப் மூலம் அனைத்து ஆவணங்களையும் சேகரித்து அதை உபயோகப் படுத்தலாம் என அறிவித்துள்ளது.    ஆனால் மாநில அரசு எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.”  என குற்றம் சாட்டி உள்ளனர்.