ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் இளைஞர்கள் நடத்திய போராட்டம், வன்முறையில் முடிந்த சோகம் நாம் அறிந்ததுதான்.
காவல்துறையினரே வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக ஏராளமான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களிலும், தொலைக்காட்சிகளிலும் வெளியாகி அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளன.
இந்த நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்த தன்னையும் காவல்துறையினர் தாக்கியதாக இமான் அண்ணாச்சி தெரிவித்துள்ளார்.
மாணவர்களை சமாதானப்படுத்த முயற்சித்துக் கொண்டிருந்தபோது, நண்பர் மீதும் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
”மாணவர்கள் கடலுக்குள் இறங்குவது குறித்து கேள்வி பட்டு, நானும் மெரினாவுக்கு பதறிப்போய் சென்றேன். அப்போது காவல்துறையினர் என்னையும் எனது நண்பரையும் கடுமையாகத் தாக்கினர். எனது நண்பருக்கு தலையில் 15 தையல்கள் போடப்பட்டுள்ளன. காலிலும் அடி! எனக்கும் கையில் பலத்த அடி விழுந்தது. . இதற்கு காவல்துறை பதில் சொல்ல வேண்டும்” என்று இமான் அண்ணாச்சி கூறியுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகியுள்ளது.
வீடியோ…