நாளை, தெனாலிராமன், யான், தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் போஸ் வெங்கட். அவர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு கோரிக்கை விடுத்திருக்கிறார். அதில் கூறியிருப்பதாவது:

சாத்தான்குளம் சம்பவத்திற்கு பிறகு காவல் துறையால் பொதுவெளியில் பொதுமக்கள் கொடூரமாக தாக்கப்படும் காணொளி காட்சிகள் சமூக வலைத் தளங்களில் தொடர்ந்து அதிகமாக பகிறப்படுகிறது. இவையெல்லாம் ஏன் முறையாக விசாரிக்கப்பட க்கூடாது?
இதற்கு காவல் துறையே ஒரு தனிக்குழு அமைத்து நடந்த சம்பவங்களை முறையாக விசாரித்து தவறிழைத்த வர்கள் தண்டிக்கப்பட வேண்டும். காவல் துறையின் கண்ணியம் காக்கப்பட வேண்டும்.
இவ்வாறு போஸ் வெங்கட் கூறி உள்ளார்.
Patrikai.com official YouTube Channel