நியூயார்க்

ற்போது அமெரிக்காவில் போராட்டம் நடப்பதால் எஃப் பி ஐ ஊழியர் உள்ளிட்ட அனைத்து  கருப்பின மக்கள் மீதும் அமெரிக்கக் காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

அமெரிக்காவை பொறுத்தவரை கருப்பின மக்களை இன்னும் நாலாந்தர குடிமக்களாக நடத்துவது தொடர்ந்து வருகிறது.   அந்த அளவுக்கு அங்கு நிறப் பாகுபாடு நிறைந்துள்ளது.   சமீபத்தில் கள்ள நோட்டுப் புகாரில் கைது செய்யப்பட்ட கருப்பினரான ஜார்ஜ் ஃப்ளோயிட் காவல்துறையினரால் கொல்லப்பட்டதாக வெளியான வீடியோவால் நாடெங்கும் கடும் போராட்டம் நிகழ்ந்து வருகிறது.

நேற்று வெள்ளை மாளிகை முன்பு நடந்த போராட்டத்தில் கடும் வன்முறை வெடித்தது.   அதன்பிறகு தேசிய பாதுகாவல் படையினர் கண்ணீர் புகைக் குண்டுகள், மிளகு ஸ்பிரே ஆகியவற்றை வீசி கூட்டத்தைக் கலைத்தனர்.   இந்த போராட்டத்தால் காவல்துறையினர் கண்ணில் படும் கருப்பின மக்கள் அனைவரையும் கைது செய்து வருவதாக சமூக வலைத் தளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.

அவ்வகையில் எஃப் பி ஐ ஏஜண்டான கருப்பினர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்யும் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.   நமது ஊர் சி பி ஐ க்கு சமமான எஃப் பி ஐ  ஏஜண்டை கருப்பினத்தவர் என்னும் காரணத்துக்காக காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.   ஆத்திரமடைந்த அவர் அந்த காவல்துறையினரின் பெயர் பதவி குறித்த விவரங்களைக் கேட்டுச் சத்தமிடும் காட்சியும் வீடியோவில் காணப்படுகிறது.

[youtube https://www.youtube.com/watch?v=lD7tW38Gehk]