சென்னை: தனது வீட்டை துப்புரவு தொழிலாளிகள் உடையில் வந்து சிலர் தாக்கிய சம்பவத்தில் காவல்துறையும் இணைந்தே செயல்பட்டுள்ளதாக சவுக்கு சங்கர் குற்றம் சாட்டியுள்ளார். தூய்மை பணியாளர்களின் இந்த செயலுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி உள்பட அனைத்துகட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
அரசியல் விமர்சகரும், பத்திரிக்கையாளருமான சவுக்கு சங்கரின் சென்னை வீட்டில் துப்புரவு தொழிலாளர்கள் புகுந்து சாக்கடையை கொட்டிவிட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். ஆனால், அத்துமீறி இந்த இழிவு செயலில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்கள் ஒருவரைக்கூட காவல்துறை இதுவரை கைது செய்யவில்லை என்பது மர்மதாக உள்ளது.
ஒருவடைய வீட்டில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்த துப்புறவு தொழிலாளர்களுக்கு அனுமதி கொடுத்தது யார் என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. நாளை இதே நிலை ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும், காவல்துறையினருக்கும், நீதிபதிகளுக்கும் நடைபெறாது என்பதற்கு என்ன உத்தரவாதம் என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
திமுக அரசுக்கு எதிராக பேசி வருவதுடன், பல்வேறு அமைச்சர்கள் மீதான ஊழல்களை அப்பலப்படுத்தியவர் பிரபலயூடியூபர் சவுக்கு சங்கர், இதனால் அவர்மீது கடும் கோபத்தில் உள்ள திமுக அரசு, அவர்மீது ஏராளமான வழக்குகளை பதிவு செய்து சிறையில் அடைந்து கொடுமை படுத்திய நிலையில், உச்சநீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கியது. இதையடுத்து அவர் மீண்டும் தனது அரசியல் விமர்சனங்களை தொடர்ந்து வருகிறார்.
சமீபத்தில், ‘கழிவுநீர் அகற்று சேவை வாகனங்கள் ஒப்பந்தம்’ தொடர்பாக விமர்சனம் செய்திருந்தார். இதில் ஊழல் நடைபெற்று இருப்பதாகவும் கூறி யிருந்தார். இதனால், அவர்மீது அரசு நேரடியாக நடவடிக்கை எடுக்காமல், தூய்மை பணியாளர்களைக் கொண்டு தாக்குதல் நடத்தி உள்ளது.
சவுக்கு சங்கர் தங்களை இழிவுபடுத்தி விட்டதாகக் கூறி தூய்மைப் பணியாளர்கள் ஒரு சிலர் திரண்டு, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவருடைய வீட்டின் முன்பு வந்ததுடன், எந்தவித அறிவிப்பு இன்றி சட்டவிரோதமாக, அவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்து பொருட்களை சேதப்படுத்தினர். மேலும், வீட்டுக்குள் கழிவுநீரையும் ஊற்றினர், நாறடித்துள்ளனர். அங்கு வசித்து வரும் சவுக்கு சங்கரின் தாயாருக்கு கொலை மிரட்டலும் விடுத்தனர். இது பெரும் பரபரப்பை எற்படுத்தியது.
இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த சவுக்க சங்கர், இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டு, புகைப்படங்களையும் பகிர்ந்து இருந்தார். இதுகுறித்து பேசிய அவர் “எனது வீட்டின் அனைத்து பகுதிகளிலும் சாக்கடை, மலத்தை கொட்டிவிட்டு சென்றிருக்கின்றனர். நான் துப்புரவு தொழிலாளிகளுக்கு எதிராக எதையும் பேசவில்லை. துப்புரவு தொழிலாளர்களுக்கு வாங்கி தர வேண்டிய துப்புரவு வாகனங்கள் விவகாரத்தில் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட சிலர் ஊழல் செய்திருப்பதாக, துப்புரவு பணியாளர்கள் நலனிற்காகதான் பேசியிருந்தேன்.
நான் இருக்கும் இந்த வீடு 3 மாதங்களுக்கு முன்பு நான் குடிவந்தது. இந்த வீட்டில்தான் நான் இருக்கிறேன் என்பது காவல்துறை தவிர்த்து வேறு யாருக்கும் தெரியாது. சென்னை மாநகர ஆணையர் அருண் சொன்னதன் பேரில்தான் துப்புரவு தொழிலாளர்களை அழைத்து வந்து என் வீட்டை போலீஸே காட்டியுள்ளனர்” என்று குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் அவர்களும் சேர்ந்து தூண்டிவிட்டுதான் இந்த தாக்குதல் நடந்து உள்ளது என நான் உறுதியாக நம்புகிறேன். அருண் அவர்கள் செய்யும் முறைகேடுகளை நான் தொடர்ந்து பேசி வருகிறேன். அதனால் அவர்கள் இந்த தாக்குதலை நடத்தி உள்ளனர்.
முதலில் துப்புரவு பணியாளர்கள் போல சில ரவுடிகள் வந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பேசியிருந்த சவுக்கு சங்கர், தற்போது அவர்கள் துப்புரவு தொழிலாளர்களை காவல்துறையினர்தான் அங்கு அழைத்து வந்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.
சவுக்கு சங்கர் வீட்டில் என்ன நடந்தது என்பது குறித்து விரைவில் காவல்துறை விளக்கம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக சவுக்கு சங்கர் தனது ‘எக்ஸ்’ வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள இடுகையில், இன்று காலை 9.30 மணி முதல், துப்புறவு தொழிலாளிகள் என்று கூறிக் கொண்டு 50 பேர் கொண்ட கும்பல் நானும் என் தாயாரும் குடியிருக்கும் வீட்டின் மீது சராமரியாக தாக்குதல் நடத்தி வருகிறது. நான் வெளியே கிளம்பிய 5 நிமிடத்தில் வந்த இந்த கும்பல், வீட்டின் கதவை உடைத்து, உள்ளே நுழைந்து, படுக்கையறை, சமையலறை, சமையல் பொருட்கள் என அத்தனை பொருட்களின் மீதும் சாக்கடையையும் மலத்தையும் கொட்டினர். என்ன நடந்தது என்று என் தாயாருக்கு போன் செய்தபோது அந்த போனை வாங்கி வீடியோ காலில் வந்து கொலை மிரட்டல் விடுத்தனர்.
காவல் கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக தகவல் தெரிவித்தேன். ஒரே ஒரு உதவி ஆய்வாளரும் ஒரு காவலரும் மட்டும் வந்தனர். 9.30 மணி முதல் இது வரை வரை போராட்டம் நடத்தியவர்கள் அந்த இடத்தை விட்டு அகலவில்லை. அந்த இடத்திற்கு சென்ற ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். யாருடைய தூண்டுதலில் இந்தத் தாக்குதல் நடைபெறுகிறது என்பதை சொல்ல வேண்டியதில்லை.
தாக்குதல் நடத்தியவர்கள் என் தாயாரின் போனை பிடுங்கி வீடியோ காலில் பேசியபோது பதிவு செய்தது.,,இப்போது மணி 11.43. இந்தத் தருணம் வரை தாக்குதல் நடத்த வந்தவர்கள் அதே இடத்தில் இருக்கின்றனர். காவல்துறையினர் என்னை வீட்டுக்கு வரவேண்டாம் என்று அறிவுறுத்துகின்றனர் என்று தெரிவித்து உள்ளார்.
இதன் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், இன்று காலை 9.30 மணிக்கு அலுவலகத்திற்கு செல்லும் போது என் வாகனத்தின் மீது கல் எறிந்தார்கள். என் அம்மாவிடம் போனில் பேசிக் கொண்டு இருக்கும்போதே வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து தாக்குதல் நடத்தினர். நான் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து புகார் அளித்தேன். என் அம்மாவின் போனை பிடிடுங்கி என்னிடம் வீடியோ கால் பேசினர்.
செல்வப்பெருந்தகை மீது ஊழல் குற்றச்சாட்டுகடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தமிழக முதலமைச்சர் அவர்கள் துப்புரவு தொழிலாளிகளுக்காக மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவி உடன் 230 கழிவுநீர் சுத்திகரிப்பு வாகனத்தை வழங்கினார். இதில் 87 பேர் மட்டுமே உண்மையான பயனாளிகள், மீதமுள்ள அத்தனை பேரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகையின் பினாமிகள். வாகனங்களை மெட்ரோ வாட்டர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டு தரும் பணத்தை தனியார் கம்பெனியில் முதலீடு செய்து, துப்புரவு தொழிலாளர்களுக்கு மாதம் 20 ஆயிரம் கொடுத்துவிட்டு மீத பணத்தை செல்வப்பெருந்தகை எடுத்துக் கொள்கிறார் என நான் குற்றம்சாட்டி இருந்தேன். இது தொடர்பான ஆதாரங்களை நான் காணொலியில் காண்பித்து இருந்தேன்.
காங். தலைவர் செல்வப்பெருந்தகை, காவல் ஆணையர் அருண் மீது குற்றச்சாட்டுசெல்வப்பெருந்தகை, சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் அவர்களும் சேர்ந்து தூண்டிவிட்டுதான் இந்த தாக்குதல் நடந்து உள்ளது என நான் உறுதியாக நம்புகிறேன். சென்னை மாநகர காவல்ஆணையர் அருண் அவர்கள் செய்யும் முறைகேடுகளை நான் தொடர்ந்து பேசி வருகிறேன்.
இந்த வீட்டின் முகவரி யாருக்குமே தெரியாது. மதுரவாயிலில் உள்ள எனது சொந்த வீடு சீல் வைக்கப்பட்டு உள்ளது. இந்த வீட்டுக்கு வந்து 3 மாதம்தான் ஆகிறது. இந்த வீட்டின் முகவரியை காவல்துறை உள்ளிட்ட யாருக்கும் கொடுத்ததே கிடையாது. காவல்துறை என் வீட்டின் முகவரியை அளித்து தூண்டிவிட்டு தாக்குதலை நடத்தி உள்ளனர்.
செல்வப்பெருந்தகை மற்றும் அருண் நெருக்கம் என்பது எனக்கு தெரியும். திரு.அருண் அவர்கள், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகையின் தொடர்பு தெரியக்கூடாது என்பதற்காக அவசர அவசரமாக புலனாய்வை முடித்து குற்றப்பத்திக்கையை தாக்கல் செய்து உள்ளார்.
மீடியாவை மூட சொல்லி மிரட்டல்ஒட்டுமொத்தமாக என்னையும், எனது சவுக்கு மீடியாவையும் முடித்துவிட வேண்டும் என அருண் திட்டமிட்டு செயல்படு கிறார். வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து புகார் நிச்சயம் கொடுப்போம். சவுக்கு மீடியாவை நிறுத்த சொல்லி நீண்டநாட்களாக மிரட்டல் வந்து கொண்டு இருந்தது. அரசு மற்றும் காவல்துறைக்கு எதிராக தொடர்ந்து பேசி வருவதால் நான் இறுதி எச்சரிக்கையாக பார்க்கிறேன்.
வீடு புகுந்து சாப்பிடும் டேபிள் மற்றும் படுக்கை அறைகளில் மலம் அள்ளி ஊற்றுகிறார்கள் என்றால் நீ உனது மீடியாவை நிறுத்து என்பதன் எச்சரிக்கைதான். என் வீடு மற்றும் அலுவலகத்தை காலி செய்ய சொல்லிவிட்டார்கள். எந்த அளவுக்கு கீழ் தரமாக இந்த அரசு இறங்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.
இதை நான் 4 ஆண்டுகளாக பேசி வருகிறேன். இப்படி தாக்குதல் தொடுக்கும் அளவுக்கு நான் செய்த தவறு என்ன?. துப்புரவு தொழிலாளிகள் வயிற்றில் அடித்து சுரண்டாதே என்றுதான் நான் பேசி உள்ளேன். அவர்களை நான் இழிவாக பேசவில்லை. காவல்துறை விசாரணையில் கிடைத்த புகைப்படங்களை கொண்டு போஸ்டராக அடித்து உள்ளனர் என கூறினார்.”
சவுக்கு சங்கர் வீடு தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் வீட்டில் அவரது தாயார் தனியாக இருந்தபோது. 50 பேர் கொண்ட கும்பல் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து சில பொருட்களை எடுத் துச் சென்றதுடன், படுக்கையறை, சமையல்அறை, சமையல்பொருட் கள் என்று அனைத்துப் பொருட் களின் மீதும் சாக்கடையையும், மலத்தையும் கொட்டி உள்ளார்கள் என்ற செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற கீழ்த்தரமான செயல் மற்றும் தாக்குதல் கண்டனத்துக்குரியது. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை யுள்ள யாரும் இதை சகித்துக் கொள்ள மாட்டார்கள்.
மனசாட்சியுள்ள அனைவரும் தலைகுனிந்து வெட்கப்பட வேண் டிய ஒரு சம்பவமாகும். இந்தக் கொடுமையான செயலை செய்த கும்பலையும், பின்னணியில் உள்ள அனைவரையும் சட்டத்தின் முன்பு நிறுத்தி கடுமையாக தண்டிக்க வேண்டும்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை: திமுக ஆட்சி யின் ஊழலையும், சட்டம் ஒழுங் கைக் காப்பாற்ற முடியாத கையா லாகாத்தனத்தையும் குறித்து பேசு பவர்கள் மீது வழக்கு தொடர்வது, நள்ளிரவில் காவல்துறையினரை அனுப்பி மிரட்டுவது, குண்டாஸ் வழக்கில் கைது செய்வதென தொடர்ந்து அராஜகப் போக்கில் ஈடுபட்டு வருகிறது திமுக அரசு,
ஆட்சியாளர்களின் இந்த அராஜ கப் போக்கு தொடர்வது நல்ல தல்ல. இதன் பின்னணியில் இருப் பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: சவுக்கு சங்கர் வீட்டினுள் அத்துமீறி நுழைந்த கும்பல், அவ ருக்கு கொலை மிரட்டல் விடுத்தி ருப்பது கடும் கண்டனத்துக் குரியது. தமிழகத்தில் இத்தகைய விபரீதங்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும். இதில் சம்பந்தப்பட்ட நபர்கள் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக் கப்பட வேண்டும்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: சவுக்கு சங்கர் இல்லத்தில் அரங்கேறியிருக்கும் திட்டமிட்ட வன்முறை அநாகரிகத் தின் உச்சமாகும்.
விசிக தலைவர் திருமாவளவன்: சவுக்கு சங்கரின் இல்லத்தில் நுழைந்து, அவரது தாயாரை அச்சுறுத்தியதுடன் அங்கே மனிதக் கழிவு உள்ளிட்ட சாக்கடை கழிவுகளைக் கொட் டியுள்ள குரூரச் செயல் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இது அநாகரி கத்தின் உச்சம். இதில் தொடர் புடைய அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாம் தமிழர் கட்சி சீமான்: சவுக்கு சங்கர் வீட்டின் மீது நடத்தப்பட்டுள்ள கோரத்தாக்கு தல் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. இத்தகைய செயல்பாடுகள் வெளிப் படையான ஜனநாயகப் படுகொலையாகும். வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து மனிதக் கழி வையும், சாக்கடையையும் கொட் டியது கண்டனத்துக்குரியது.
தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த்: ஒருவரின் விமர்சனம் ஏற்புடையதாக இல்லை யென்றால், அதைச் சட்டப்படி எதிர்கொள்ள வேண்டும். அதை விடுத்து, விமர்சனம் செய்தவரின் வயது முதிர்ந்த தாய் இருக்கும் இடத்தில் இப்படி அராஜகம் செய்துள்ளது கண்டிக்கத்தக்கது. இந்த இழிவான செயலை செய்தது யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.