யூரோ 2016 போட்டிகள் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று பெற்றுக்கொண்டு இருக்கிறது. நேற்று கால் இறுதி போட்டிகள் தகுதி பெற போட்டிகள் நடைபெற்றன.
சுவிச்சர்லாந்து – போலந்து, வேல்ஸ் – வட அயர்லாந்து, குரோஷியா – போர்ச்சுகல் ஆகிய நாடுகள் போட்டியிட்டனர்.
சுவிச்சர்லாந்து – போலந்து
பலத்தை நிரூபிக்க இரு அணிகளும் சமமாக விளையாடின. போட்டி முடியும் வரை ஏறு அணிகளும் 1-1 என்று சம நிலையில் இருந்தது.
சுவிச்சர்லாந்து அணிக்கு ஷாக்கிரி போட்டியின் அற்புதமான கோல் அடித்தார் போலந்து அணிக்கு ஜகுப் கோல் அடித்தனர். இறுதியில் பெனால்டி மூலம் போலந்து அணி 5-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
வேல்ஸ் – வட அயர்லாந்து
இந்த போட்டியை வேல்ஸ் அணி எளிதில் வெற்றி பெரும் என வல்லுனர்கள் கூற அதற்கு எதிர் மாறாக இருந்தது போட்டி. இரு அணிகளும் கோல் அடிக்க முயன்றவனம் இருந்தனர். 75வது நிமிடத்தில் வட அயர்லாந்து அணியின் மகாலே செலஃ கோல் அடிக்க வேல்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
குரோஷியா – போர்ச்சுகல்
தகுதி சுற்றில் அருமையாக விளையாடிய குரோஷியா இந்த போட்டியில் போர்ச்சுகல் அணிக்கு சவாலாக இருக்கும் என என்ன பட்டது. அதேபோல் இரு அணிகளும் கடுமையாக விளையாடி ரசிகர்கள் ஆர்வமுடன் பார்த்தனர்.
போட்டி 90 நிமிடங்கள் கழித்தும் இரு அணிகளும் கோல் எதுவும் போடாத நிலையில் எக்ஸ்ட்ரா நேரமாக 30 நிமிடம் ஒதுக்கப்பட்டது. இந்த எக்ஸ்ட்ரா நேரம் முடியும் சமயத்தில் 117வது நிமிடத்தில் போர்ச்சுகல் வீரர் குரிஷ்மா கோல் மூலம் போர்ச்சுகல் அணி கால் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
இன்று நடைபெறும் கால் இறுதி போட்டிக்கு தகுதி பெரும் போட்டி பிரான்ஸ் – ஐர்லாந்து, ஜெர்மனி – ஸ்லோவாகியா, ஹங்கேரி – பெல்ஜியம் ஆகிய அணிகள் மோதுகின்றனர்.