லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் பொங்கலுக்கு தியேட்டரில் வெளியான படம் மாஸ்டர்.

இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் செம ஹிட் அடித்துள்ளது. உலகமெங்கும் ரிலீஸாகியுள்ள இந்த படம் வசூல் சாதனை படைத்து வருகிறது.

பொங்கலுக்கு வெளியான இப்படம் உலகம் முழுவதும் 200 கோடிக்கும் மேல் வசூலித்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டாகியிருக்கிறது.

இந்நிலையில் இந்த படத்தின் மிரட்டலான பொளக்கட்டும் பற பற பாடலின் வீடீயோவை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

[youtube-feed feed=1]