நியூயார்க்

மெரிக்காவின் நியூயார்க் நகரம் சில மணி நேரம் ஆரஞ்சு நிறப் புகையால் மூடப்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

நியூயார்க் நகரம் முழுவதும் ஆரஞ்சு நிறப் புகையால் மூடப்பட்டது.  இது சில மணி நேரம் நீடித்தது.  இதனால் நியூயார்க்கில் வசிக்கும் மக்கள், அச்சமும் குழப்பமும் அடைந்தனர். நியூயார்க் நகரத்தில் இந்த புகையால் காற்று மாசு அளவு அபாயகரமான அளவை எட்டியது.   உலக அளவிலான காற்றின் தர அடிப்படையில் மிக மோசமான நகரமாக நியூயார்க் மாறியது.

அமெரிக்க வானிலை மையம் இது குறித்து, கனடாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயினால் உருவான நச்சுப்புகைகள் வட அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக விளக்கம் அளித்தது.   இதையொட்டி மக்கள் சகஜ நிலைக்கு மீண்டனர்.

நியூயார்க் வானிலை ஆய்வு மையம் இந்த புகையால் காற்றின் தரம் மோசம் அடைந்துள்ளதாகவும் இதனால் வயதானவர்கள், மற்றும் சிறு குழந்தைகள் பாதிக்கப்படலாம் என்பதாலும் அவர்கள் வெளியே வர வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளது.