மும்பை:
நிரவ் மோடியும், அவரது உறவினர் மெகுல் சோக்சியும் இணைந்து பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.12,700 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர்.

இதில் நிரவ் மோடி வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். நிரவ் மோடியின் சொத்துகளை அமலாக்க துறை கையகப்படுத்தியது. சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இவ்வழக்கு மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நிரவ் மோடி, மெகுல் சோக்சிக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவான்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இருவரும் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது.
Patrikai.com official YouTube Channel