டெல்லி: பிஎம்.வானி (PM Wani ) என்ற பெயரில் பொது இடங்களில் இலவச வைஃபை சேவையை வழங்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், விவசாயிகள் போராட்டம் உள்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பல செயல்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், பொது இடங்களில், பொதுமக்கள் இலவசமாக வைஃபை வசதி பெற பிஎம் வானி ( PM WANI) என்ற பெயரில் இலவச வைஃபை சேவை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதை செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார். இந்தியா முழுவதும் ஒரு கோடி டேட்டா சென்டர்களை திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.பி.டி.ஓக்களுக்கு எந்த உரிமமும் இல்லை, பதிவும் இல்லை, கட்டணமும் பொருந்தாது, அவை சிறிய கடைகள் அல்லது பொது சேவை மையங்களாக கூட இருக்கலாம்” என்றும் தகவல் தொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறினார்
மேலும், கொச்சி மற்றும் லட்சத்தீவுகளுக்கு இடையே நீர்மூழ்கி ஆப்டிகல் ஃபைபர் கேபிள் இணைப்பை வழங்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக கூறினார்.