சென்னை: ஆகஸ்ட் 17ந்தேதி பாமக நிறுவனர் ராமதாஸ் நடத்தும் பொதுக்குழுவுக்கு அங்கீகாரம் கிடையாது என தெரிவித்துள்ள அன்புமணி ஆதரவாளரான, பாமக வழக்கறிஞர் கே.பாலு கூறியதுடன், பாமக முழுவதும் ‘அன்புமணி கட்டுப்பாட்டில்தான் உள்ளது. ஒட்டுமொத்த கட்சி நிர்வாகிகள் அனைவரும் அன்புமணி பக்கம்தான் உள்ளோம்’ எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பாமகவில் தந்தை மகனுக்கு இடையே நடைபெற்றும் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இதற்கிடையில், ராமதாஸ் ஆகஸ்டு 17ந்தேதி பொதுக்குழு கூட்டப்படுவதாக அறிவித்த நிலையில், அன்புமணி முன்னதாகவே கடந்த 9ந்தேதி பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, தனது பதவியை மேலும் ஒராண்டுக்கு நீட்டித்தது உள்பட பல்வேறுதீர்மானங்களையும் நிறைவேற்றி உள்ளார். இது சலசலப்பை ஏற்படுத்திய இது செல்லாது என கூறிவரும் ராமதாஸ், இதுகுறித்து இந்திய தேர்தல் அணையத்திலும் புகார் தெரிவித்துள்ளார். அதில்,பாமக நிறுவனர் மற்றும் தலைவரான ராமதாஸின் அனுமதி இல்லாமல் எந்தவொரு கூட்டத்தையும் கூட்டுவதற்கு அன்புமணிக்கு அதிகாரம் இல்லை என்றும் அவர், சாதாரண செயல் தலைவர்தான் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ஆதரவாளரும், பாமக எம்எல்ஏவும், வழக்கறிஞருமான பாலு, ஆகஸ்டு 17ந்தேதி ராமதாஸ் நடத்தும் பொதுக்குழுவுக்கு அங்கீகாரம் கிடையாது என தெரிவித்தார். பாமக முழுவதும் அன்புமணி கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்றவர், ஒட்டுமொத்த கட்சி நிர்வாகிகள் அனைவரும் அன்புமணி பக்கம்தான் உள்ளோம்.
மருத்துவர் ராமதாஸ் தன்னை பா.ம.க. தலைவர் என்று அறிவித்துக் கொள்வதற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் முரண்பட்ட தகவல் தெரிவிக்கப்பட உள்ளது. பாமகவின் நற்பெயருக்கு எதிராக செயல்படுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்போம். கட்சி நிறுவனராக மருத்துவர் ராமதாஸ் கூட்டம் நடத்தலாம், ஆனால் பொதுக்குழுவை கூட்ட முடியாது என தெரிவித்தார்.
அன்புமணி ராமதாஸ் கூட்டிய பொதுக்குழு சட்டவிரோதமானது! தேர்தல் ஆணையத்தில் ராமதாஸ் புகார்.!