சென்னை

நெஞ்சு வலி காரணமாக சேலம் மேற்கு தொகுதி பாமக எல் எல் ஏ அருள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திடீர் நெஞ்சுவலி காரணமாக சேலம் மேற்கு தொகுதி பாமக எம்.எல்.ஏ அருள் நெ சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அவர் தற்போது நலமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாமக எம் எல் ஏ அருள் சபநாயகர் அப்பாவுவை சந்திக்க சென்னை வந்த நிலையில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

சேலத்தில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நாளை பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், பாமக எம்.எல்.ஏ அருளுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டிருப்பது கட்சியினரிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.