சென்னை: பாமக தலைவர் அன்புமணிதான், அன்புமணிக்கே மாம்பழம் சின்னம் என இந்திய தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளதாக பாமக பாலு விளக்கம் அளித்தார். அதற்கான ஆதாரங்கள் என கடிதங்களையும் செய்தியாளர்களிடம் காட்டினார்.

பாமகவில் தந்தை மகனுக்கு இடையே எழுந்துள்ள மோதல் காரணமாக பாமக இரண்டாக சிதறுண்டு கிடக்கிறது. பாமகவில் இருந்து அன்புமணியை முழுமையாக நீக்கி நடவடிக்கை எடுத்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், அவர்மீது ஏராளமான குற்றச்சாட்டுக்களை கூறி உள்ளார். மேலும், விரைவில் பாமக பொதுக்குழு கூட்டப்பட இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த பாமக வழக்கறிஞரும், அன்புமணியின் ஆதரவாளருமான பாலு, 2026 வரை பாமக தலைவராக அன்புமணி நீடிப்பார் என்ற பாமக பொதுக்குழு தீர்மானத்தை ஏற்று தேர்தல் ஆணையம் கடிதம் தங்களது கடிதம் அனுப்பியுள்ளது என்று கூறி அந்த கடிதத்தை காட்டியதுடன், அன்புமணி தலைமையிலான பாமகவுக்கு தேர்தல் ஆணையம் மாம்பழம் சின்னம் வழங்கப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
அன்புமணியை தலைவராக ஏற்பவர்கள் மட்டுமே பாமக கொடி, சின்னத்தை பயன்படுத்த முடியும் என்ற பாலு, 2026 வரை பாமக தலைவராக அன்புமணியே நீடிப்பார் என்றவர், பிரிந்திவர்கள், விலகியவர் மீண்டும் கட்சியில் சேர வேண்டும் என அழைப்பு விடுத்த பாலு, பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா போன்றோர் கட்சி பதவியில் தொடர்வார்கள் என்றும் கூறினார்.
மேலும், கட்சியின் மற்ற நிர்வாகிகள், பொறுப்பாளர்களும் அந்த பொறுப்பில் அப்படியே தொடர்கிறார்கள் என தேர்தல் ஆணையம் அங்கீகரித்து கடிதம் கொடுத்துள்ளது.
மேலும் 2026 சட்டமன்றத் தேர்தலில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்களுக்கு பாமகவின் சின்னமான மாம்பழம் சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியும். பாமக சார்பில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்களுக்கு A பார்ம், B.பார்ம் கையொப்பமிடும் அனுமதியும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸுக்கே தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. டாக்டர் ராமதாஸ் தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. வரும் காலங்களில் பாமகவில் 2 அணி இல்லை. இனி பாமகவில் 2 அணி கிடையாது என்று தெரிவித்திருந்தார்.
சமீபகாலமாக பாமகவில் சில குழப்பங்கள் நீடித்து வந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் இந்த கடிதத்தின் வாயிலாக தீர்வு கிடைத்துள்ளது. மேலும் பாட்டாளி மக்கள் கட்சியினுடைய தலைமை அலுவலகம் இனி சென்னை தியாகராய நகர் திலக் தெருவில் உள்ள இந்த இடம்தான் தலைமை அலுவலகம் என்பதையும் தேர்தல் ஆணையம் ஏற்கனவே அங்கீகரித்து இருந்தது.
இவ்வாறு கூறினார்.
போத்தீஸ் நிறுவனங்கள் மற்றும் உரிமையாளர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை…