சென்னை:  வரும்  (நவம்பர்) 15ந்தேதி அன்று  பாமக வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவை மாநில செயற்குழு கூட்டம் நடைபெறும் என பாமக நிறுவனர் டாக்டர்  ராமதாஸ் அறிவித்துள்ளார்.

பாமகவில் தந்தை மகனுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல் நாளுக்கு நாள்  பெரிதாகி வருகிறது. ஒருவரை ஒருவர் கட்சியில் இருந்து ஓரங்கட்டும் பணியில் தங்களது ஆதரவாளர்கள் மூலம்  தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இதற்கிடையில் பாமகவின் சின்னம் உள்பட கட்சி தலைவர் பதவியை அன்புமணி பெற்றுள்ளார். இதை எதிர்த்து ராமதாஸ் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளார்.

இந்த நிலையில்,  பாமக வழக்கறிஞர்கள் கூட்டத்தை  ராமதாஸ் கூட்டி உள்ளார். அதன்படி,   நவம்பர் 15ஆம் தேதி பாமக வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவை மாநில செயற்குழு கூட்டம்  நடைபெறும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து,  நவம்பர் 18ல் பாமக, வன்னியர் சங்க மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் கூட்டமும்,

நவம்பர் 19ல் பாமக இளைஞர் சங்க மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டமும்  நடைபெறும்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.