சென்னை: திமுக கூட்டணிக்கு பாமக வரும், அதிமுக கூட்டணியில் விசிக செல்லும் என்பது எல்லாம் வெறும் வதந்தி என திமுக தலைவரும், தமிழ்நாடு முதலச்சருமான மு.க.ஸ்டாலின் கூறினார்.

டைம்ஸ்ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழுக்கு அளித்த நேர்காணலில் முதல்வர் மு.க.ஸ்டாலின், செய்தியாளரின் கேள்விக்கு பதில் கூறும்போது, அதிமுக – பாஜக கூட்டணியை திமுக கூட்டணி ஏற்கெனவே 2 முறை தோற்கடித்துள்ளது. 2024 மக்களவை தேர்தலிலேயே இரு கட்சிகளும் பிரிந்ததுபோல தெரிந்தாலும், கள்ளக் கூட்டணியாகத்தான் இருந்தார்கள் என்று குற்றம் சாட்டினேன். அதை வெளிப்படுத்தும் வகையில்தான் சமீபகால நிகழ்வுகள் இருந்தன.
தமிழகத்துக்கு வஞ்சகம் செய்யும் பாஜகவையும், அதனுடன் கூட்டணி சேர்ந்து துரோகம் இழைக்கும் அதிமுகவையும் தமிழக மக்கள் 3-வது முறையும் தோற்கடிப்பார்எ கள். தோழமை கட்சியினரின் ஆலோசனைகள் மட்டுமின்றி, ஆக்கப்பூர்வமான விமர்சனங்களையும் கேட்டு, அவர்களது ஒத்துழைப்புடன்தான் திமுக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தோழமை கட்சியினரின் ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை எப்போதும் மதிக்கிறேன். துணை முதல்வர் எனக்கும் துணையாக இருந்து பணியாற்றுகிறார். தமிழக மக்களுக்கும் துணையாக இருந்து திட்டங்களை நடைமுறைப்படுத்துகிறார்.
2026 தேர்தலில், ‘திமுகவின் பக்கம் பாமக வந்துவிடும் என்றும், அதிமுகவின் பக்கம் விசிக சென்றுவிடும் என்றும் சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வருகின்றன. அதனால்தான் ராமதாஸ் – அன்புமணி இடையே மோதல் என்றும் சில கிசுகிசுக்கள் உள்ளது.
இதை முணுமுணுப்புகள் என்று நீங்களே சொல்லிவிட்டீர்கள். அதை புறந்தள்ளுங்கள். அது வதந்திதான். திமுக கூட்டணி வலிமையாக உள்ளது. தோழமை கட்சிகளும் உறுதியாக இருக்கின்றன.
இவ்வாறு கூறினார்.