சென்னை: பாமக தலைவர் ஜி.கே.மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சியின் தந்தை ராமதாஸ், மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் தீவிரமடைந்துள்ளது. இதையடுத்து, இருவரும் தனித்தனியாக பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, தான்தான் தலைவர்கள் என்று கூறி வருகின்றனர். இதனால் பாமக தொண்டர்கள் குழப்பி போய் உள்ளதுடன், பலர் மாற்றுகட்சியை நோக்கி படையெடுக்கத் தொடங்கி உள்ளனர்.
இந்த நிலையில், ராமதாசின் தீவிர ஆதரவாளரான கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே.மணி, நெஞ்சுவலி மற்றும் முதுகு தண்டு வலி காரணமாக சென்னை வானகரம் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது பாமக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜிகே. மணி சமீபத்தில் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நடைபெறுகிற பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்று அன்புமணிக்கு எதிராக 16 முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றியதில் முக்கிய பங்காற்றியவர்.
ராமதாசை கலந்து ஆலோசிக்காமல் பொதுக்குழு என்ற பெயரில் ஒரு தனி நாற்காலி போட்டு துண்டு அணிவித்து படம் வைத்து அந்தக் கூட்டத்தில் புத்தி சுகாதார சுவாதீனம் இல்லாத சில விஷமிகளை தூண்டிவிட்டு மருத்துவம் கடவுள் சிலை முன்பு நின்று கொண்டு கடவுளிடம் ஐயாவுக்கு நல்ல புத்தியை கொடு என்று மருத்துவர் ஐயா அவர்களை அவமானப்படுத்தும் விதமாக செய்த நடவடிக்கையை ஏற்றும் யாரும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒழுங்கீனமான அநாகரீகமான செயல் என்றும் ராமதாசை நேரில் பேசி ஆசி பெற வேண்டும் வாழ்த்துக்களை பெற வேண்டும் என ஆர்வத்துடன் பார்க்க வருபவர்களை அங்கே செல்ல வேண்டாம் என வலியுறுத்தி பணம் பதவி கொடுப்பதாக ஆசை வார்த்தைகளை காட்டியும் வாகன ஏற்பாடுகள் செய்தும் அனைவருக்கு கடத்திச் சென்றதாகவும் குற்றம் சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.