விழுப்புரம்:
பா.ம.க.வின் சமூக நீதி மாநாட்டு நேற்று விழுப்புரத்தில் நடைபெறஅறது. மாநாட்டில் இயற்றப்பட்ட சில முக்கிய தீர்மானங்கள்.
* மருத்துவ கல்விக்கான ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும்.
* மருத்துவ கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
* கல்வியை மீண்டும் மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும்.
* மாநிலங்களுக்கு சுயாட்சி வழங்க வேண்டும்.
* தமிழ்நாட்டில் பின்தங்கிய பகுதிகளின் முன்னேற்றத்திற்கு சிறப்பு திட்டம் கொண்டு வர வேண்டும்.
* மக்கள் தொகை அடிப்படையில் அனைத்து பிரிவினருக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
* மத்திய அரசு பணிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு, 27 ஆண்டுகள் ஆகும் நிலையில் அதன் பயன் இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை. எனவே மத்திய அரசு பணியில் உள்ள பிற்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். மத்திய அரசு இடஒதுக்கீட்டில் கிரீமிலேயர் முறையை நீக்க வேண்டும்.
* பெரு நிறுவனங்கள், நீதித்துறையில் இடஒதுக்கீடு தேவை.
* பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசியல் சட்ட தகுதி தேவை.
* செப்டம்பர் 17–ந் தேதியை தியாகிகள் தினமாக அறிவிக்க வேண்டும்.* தமிழகத்தின் சீரான வளர்ச்சிக்கு 371-வது அரசியல் சாசன பிரிவு தேவை. 371-வது பிரிவு தமிழகத்துக்கு இருந்தால் நீட் தேர்வில் நமது மாணவர்களுக்கு கிடைத்திருக்கும். தமிழகத்துக்கு வசதியாக அரசியல் சாசனத்தில் 371-வது பிரிவில் திருத்தம் தேவை.