டில்லி
பாஜக பாராளுமன்ற உறுப்பினர் கூட்டத்தில் வரும் தேர்தலுக்குள் பாஜகவினர் மூன்று லட்சம் ‘உண்மையான’ கணக்காளர்களிடம் இருந்து லைக்குகள் வாங்கிக் காட்ட வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோர் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விருந்து ஒன்று அளித்தனர். அதில் அனைத்து பாஜக பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துக் கொண்டனர். அப்போது சமூக வலைத்தளங்களில் கட்சியினரின் பங்கு குறித்து பேசப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் அங்குள்ளவர்களில் முகநூலில் உள்ளவர்கள் எத்தனி பேர் என கேட்டதற்கு பெரும்பாலான உறுப்பினர்கள் கை தூக்கி உள்ள்னர். பிரதமர் மோடி அவர்களில் எத்தனை பேர் 3 லட்சம் லைக்குகள் வாங்கி உள்ளனர் என வினவி உள்ளார். அதற்கு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிலான உறுப்பினர்களே கைகளை உயர்த்தி உள்ளனர்.
அதன் பின் மோடி, “நீங்கள் ஓவ்வொருவரும் மூன்று லட்சம் லைக்குகள் வாங்க வேண்டும். அவை உண்மையானஹாக இருப்பது அவசியம். லைக்குகளை நிறைய வாங்க உள்ள செயலிகளை பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு வாங்குபவர்களுடைய தொகுதியில் உள்ள கட்சித் தொண்டர்களுடன் நானும் மற்ற தலைவர்களும் வீடியோ மூலம் கலந்துரையாடுவோம்.” என தெரிவித்துள்ளார்.
இந்த தகவலைக் கூறிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிரதமர் சமூக வலைத் தளங்களின் பங்கு வரும் 2019ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் அதிகமாக இருக்கும் என்பதால் இவ்வாறு இலக்கு நிர்ணயம் செய்ததாக தெரிவித்துள்ளார்.