புதுடெல்லி:
இந்தியாவின் தலைமைத்துவம் சரியில்லை! திறமையின்மை மற்றும் கார்ப்பரேட் சார்பு அரசியல் நம் நாட்டை ஆபத்தான சூழ்நிலைக்கு கொண்டு வந்துள்ளது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
பொருளாதாரம், சமூக நல்லிணக்கம் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆகியவை மத்திய அரசால் சீர்குலைக்கபட்டுள்ளது, ஒவ்வொரு வகையிலும் வறும் பல நெருக்கடிகளை பிரதமர் நரேந்திர மோடியால் கையாள முடியவில்லை.
மேலும் நாட்டில் உள்ள ஒரு சதவீத மக்களுக்கு நாட்டை விற்பதை விட்டுவிட்டு, அவர் செய்ய தெரிந்தெடுக்கப்பட்ட வேலையில் கவனம் செலுத்துமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் ராகுல் காந்தி கேட்டுக்கொண்டார்.
ராகுல்காந்தி, பிரதமர் நரேந்திர மோடியிடம் பொருளாதாரத்தை சீர் படுத்தும் நடவடிக்கைகளையும், புதிய வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெறும் நடவடிக்கைகளை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டார். விவசாயிகளின் போராட்டத்தை பெரிதுபடுத்தாததால் தான் தற்போது மத்திய அரசால் நிலைமையை கட்டுப்படுத்த முடியவில்லை என தெரிவித்துள்ளார்.
அவர்கள் பொருளாதாரத்தை சீர்குலைத்து, நாட்டின் நல்லிணக்கத்தை சீர்குலைத்து, நாட்டின் பாதுகாப்பை குழப்பி விட்டுள்ளனர், மேலும் தேவையில்லாதவற்றில்இந்தியாவை திசை திருப்ப பார்க்கின்றனர்.
தற்போது நமது நாடு மிகவும் ஆபத்தான ஒரு சூழ்நிலையில் உள்ளது, அவர்களால் அடிப்படையில் இந்த நாட்டின் நிர்வாகத்தை கையாள முடியவில்லை, அவர்களுடைய திறமையின்மை தற்போது வெளியில் தெரிய ஆரம்பித்து விட்டது என தெரிவித்துள்ளார் ராகுல் காந்தி.