புதுடெல்லி:
சிவகிரி யாத்திரையின் 90வது ஆண்டு விழா மற்றும் பிரம்ம வித்யாலயாவின் பொன்விழா ஆண்டு கூட்டுக் கொண்டாட்டங்களின் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பங்கேற்கிறார்.

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சிவகிரி யாத்திரை மற்றும் பிரம்ம வித்யாலயா ஆகிய இரண்டும் சிறந்த சமூக சீர்திருத்தவாதி ஸ்ரீ நாராயண குருவின் ஆசியுடனும் வழிகாட்டுதலுடனும் தொடங்கப்பட்டது. சிவகிரி யாத்திரை ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 30 முதல் ஜனவரி 1 வரை மூன்று நாட்கள் திருவனந்தபுரத்தில் நடைபெறும்.

இந்த யாத்திரை 1933 இல் ஒரு சில பக்தர்களுடன் தொடங்கியது, ஆனால் இப்போது தென்னிந்தியாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக மாறியுள்ளது. சிவகிரி யாத்திரையில் பங்கேற்பதற்காக உலகம் முழுவதிலுமிருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சிவகிரிக்கு வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது/