புதுடெல்லி:

கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கையாள்வது தொடர்பாக மத்திய அரசை குறிவைத்து காங்கிரஸ் கட்சி டுவிட்டரில் #ModiBetrayedIndia பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.

தொடர்ச்சியான ட்வீட்டுகளில், காங்கிரஸ் மத்திய அரசை கண்டித்து, மோடி அரசாங்கத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது என்றும், நெருக்கடியைச் சமாளிக்க அவர்களால் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பதை தெளிவு படுத்த வேண்டும். இதற்கு பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என்று தொடர்ச்சியான கேள்விகளை எழுப்பியுள்ளது.

“குடிமக்கள் பாஜக அரசு மீதான நம்பிக்கையை இழந்துவிட்டனர். மேலும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தடுக்க சுகாதார உள்கட்டமைப்பை மூலம் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை மக்கள் ஆர்வமாக உள்ளனர். என்று காங்கிரஸ் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளது.

கொரோனா பரவுவதைத் தடுப்பதற்கான ஊரடங்கை அமல் படுத்தியதில் தங்கள் தோல்வி அடைந்து விட்டதை பாஜக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

“ஆரம்பகால பூட்டுதல் வைரஸைக் கட்டுப்படுத்த பிரதமர் மோடியால் வகுக்கப்பட்ட மிகப் பெரிய உத்திகளில் ஒன்றாக ஊரடங்கு கூறப்பட்டது. ஊரடங்கின் நான்கு கட்டங்கள் மற்றும் கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு, கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதை பார்க்கும் போது, அரசாங்கத்தின் மோசமாக தவறுகள் நிரூபிக்கப்பட்டுள்ளது,” என்றும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

ஊரடங்கு உத்தரவு தோல்வி

கொரோனா பரவலை கையாண்டதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த வெள்ளிக்கிழமை மோடி அரசாங்கத்தை அவதூறாகப் பேசியிருந்தார். நாட்டில் வைரஸ் வெடிப்பைக் கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு அமல் படுத்திய ஊரடங்கு தோல்வியடைந்தது என்றார்.

மேலும் அவர் வெளியிட்ட டுவிட்டரில் ஸ்பெயின், ஜெர்மனி, இத்தாலி மற்றும் இங்கிலாந்து ஆகியவற்றுடன் ஒப்பிடும் வரைபடத்தைப் பகிர்ந்து இருந்தார்.

கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட இத்தாலி, ஸ்பெயினை விட இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் அறிக்கையின் படி இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,45,670 ஆக அதிகரித்துள்ளது. ஸ்பெயினில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,41,310 ஆக உள்ளது.

கொரோனாவில் இந்தியாவை விட பாதிக்கப்பட்ட நாடுகளாக தற்போது அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, பிரிட்டன் உள்ளது. அதற்கு அடுத்து 5-வது இடத்தில் இந்தியா உள்ளது. வரும் நாட்களில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக இருந்தால் பிரிட்டனை விட அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.